Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் : ஊடகங்களைச் சாடும் ஈ.பி.டி.பி.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் நிதானமாக செய்தி வெளியிட வேண்டுமென ஈ.பி.டி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரங்கள் காணப்படும் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் அமைதியாக வாழ்வதனையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் கொலை மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எமக்கு வாக்களித்த மக்களுக்காகவும் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட மாட்டோம்.

மக்களின் துயரங்களை இலக்காக வைத்து நாம் அரசியல் செய்வதில்லை. சிலர் அப்படி செய்கின்றனர். கொலை மற்றும் ஆட்கடத்தல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்.கடத்தப்பட்டவர்கள் உயிருடன் திரும்பி வரவேண்டும். கடத்தலில் ஈடுபடுவர்கள் கண்டறியப்பட்டு, தகுதி தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையை சமூக பிரச்சினையாக நோக்க வேண்டும். பாதுகாப்பு தரப்பினரின் அதிகாரத்தை பயன்படுத்தி, இடம்பெற்று வரும் வன்முறைகளை தடுக்க வேண்டும். வன்முறையற்ற ஜனநாயகவழியில் நாடு முன்னேற்றமடைய வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version