2006ஆம் ஆண்டில் யுத்தம் ஆரம்பித்தபின்னர் யாழ்ப்பாணத்தில் காணமல் போனவர்களின் 462 பேரின்நிலமை என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்றுயாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
2006 ஆண்டில் மாத்திரம்காணமல் போனவர்கள் பற்றிய 590 முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில்பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க மனித உரிமை ஆணைக்குழுமுயற்சி செய்தது.
அவ்வாறுகாணாமல் போனவர்களில் 128 பேர் மாத்திரம் திரும்பிவந்துள்ளனர். மிகுதி 272 பேர் குறித்து எந்தத்தகவலும் கிடைக்கவில்லை என்ற தகவலையாழ் மனித உரிமை ஆணைக்குழுதெரிவித்தது.