Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணத்தில் அமரிக்க நஞ்சருந்த அலைமோதும் மக்கள்

kfc-jaffnaஉலகின் இரண்டாவது பெரிய கோழிப் பொரியல் கடையான கே.எப்.சி யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. அமரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனம், உலகம் முழுவது 18 ஆயிரம் கிளைகளைக் கொண்டுள்ளது. உடல் நலத்திற்குக் கேடான உணவு வகைகளைத் தயாரிக்கும் இந்த நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு அமரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் நிலையில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தமது வியாபாரங்களை விரிவுபடுத்தியுள்ளன.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏழைகளை அதிகாமகப் பலிகொண்ட இவ்வாறான நிறுவனங்கள் இலங்கை போன்ற நாடுகளில் மத்தியதரவர்க்க இளைஞர்களைப் பலிகொள்கிறது.
யாழ்ப்பாணத்தில் கே.எப்.சி கோழிக் கடை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இராணுவச் சிறைக்குள் வாழும் மக்கள் கே.எப்.சி இல் உண்பதற்காக அலை மோதுவதாகத் தகவல்கள் வருகின்றன. இலங்கை போன்ற நாடுகளில் பயிரிடப்பட்டு உலகின் பணக்கார நாடுகளில் விற்கப்படும் செயற்கையற்ற உணவு வகைகளுக்காக மக்கள் அங்கு அலைமோதும் போது உடல் ஆரோக்கியத்தை அழிக்கும் கே.எப்.சி இற்கு மக்களை அடிமையாகின்றனர்.

உணவுப் பயிர் செழித்து வளரும் மண்ணில் அன்னிய தேசத்திலிருந்து கோழிப் பொரியல் விற்றுப் பிழைப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனத்திற்கு மக்கள் பலியாவதை ‘தேசியம்’ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தேசியம் என்பது அன்னியப் பொருளாதாரத்திற்கு நாட்டை அடகுவைப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Exit mobile version