இதே வேளை கொல்லப்பட்ட உறவினர்களுக்குக் கூட அஞ்சலிசெலுத்தும் அடிப்படை உரிமையை மறுக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் வடக்கையும் கிழக்கையும் இராணுவக்களைகளை விதைத்திருந்தனர். ஒவ்வொரு மூலையிலும் இராணுவமும் அரச படைகளும் ஒரு போரின் முன்னறிவைப்பைப் போன்று கண்காணித்தன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளை கீரிமலை கடற்பகுதிக்கு உயிரிழந்தவர்களுக்கான பிதிர் கடனை நிறைவேற்றுவதற்காக சென்ற அனந்தி சசிதரனை இராணுவம் இடைவழியில் தடுத்து நிறுத்தி மிரட்டியது.
அதற்கெதிரான போராட்டத்தை தனியாளாக அவர் முன்னெடுத்தார்.
கீரிமலைக்குச் செல்லும் வழியிலிருந்து வீடு திரும்பிய அனந்தி நல்லூர் கோவிலில் நடந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகத் தொலைபேசியில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அரசியல் வாதிகள் முதுகெலும்பற்றவர்கள் என்றும் தன்னோடு யாரும் ஒத்துழைக்கவில்லை என்றும் தனியாகவே போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற பாசிச வைபவமும், வடக்குக் கிழக்கின் துயரமும் இன்றைய இலங்கையின் விம்பம்.