இலங்கை அரச ஆதரவாளர்கள், அரச துணை இராணுவக் குழு உறுப்பினர்கள், தமிழ் நாட்டு பின்ன்நவீனத்துவக் குழுக்கள், தலித் அடையாளக் குழுக்கள் போன்றன இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் நடத்திய இலக்கியச் சந்திப்பு நேற்று நிறைவடைந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இக் குழுக்களின் ஒன்று கூடலுக்கு ஆதரவாக புலி ஆதரவு இணையங்கள் சிலவும் கட்டுரைகள் வெளியிட்டன. 41 வது இலக்கியச் சந்திப்பு என அழைக்கப்பட்ட அவமானகரமான இந்த நிகழ்வு கஷ்மீர் போன்று இராணுவ ஆட்சியின் கீழுள்ள யாழ்ப்பாணத்தில் ‘அரசியல் கூட்டம்’ போடலாம் என இலங்கை அரசை எதிர்க்க ஆரம்பிக்கும் சிங்கள மக்களுக்கும், புலம் பெயர் தமிழர்களுக்கும் சொல்வதாகும். தமிழ் நாட்டில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியின் பின்னர் இவ்வாறான நிக்ழ்வுகளை இலங்கை இந்திய் அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.