அரசாங்கம், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அபிவிருத்தியை மாத்திரமல்ல, அரசியல் தீர்வையும் வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பட்டுள்ளார்.
வட கிழக்கில் டக்ளஸ் தேவானதா அங்கம் வகிக்கும் அரசு வழங்கிய அபிவிருத்தி என்பது சிங்கள பெளத்தமயமாக்கல் என்பதே. அரசியல் தீர்வு என்பது இனச் சுத்திகரிப்பு என்பதே. இந்த இரண்டிற்கும் வடகிழக்கின் அரசியல் முகவர்களில் பிரதானமானவர் டக்ளஸ். இன்று டக்களஸ் தேவானந்தாவிற்குப் போட்டியாக உருவெடுக்கும் புதிய அரசியல் முகவர்கள் சம்பந்தன் தலைமைதாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதே அவரின் அச்சம் என்பது தேளிவாகிறது.