Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யார் இந்த மல்கம் எக்ஸ்? : அலெக்ஸ் இரவி

‘I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation’
-Malcolm X-

யார் இந்த மல்கம் எக்ஸ்?

 அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர், இவர் பிறந்த காலத்தில் இறந்தவர், அவர்தான் Malcolm X.
An African-American Muslim minister, public speaker, and human rights activist. To his admirers, he was a courageous advocate for the rights of African Americans, a man who indicted white America in the harshest terms for its crimes against black Americans.

இன்று பெப்ரவரி 21 அவரின் இறந்த தினம். மல்கம் எக்ஸ் (மே 19, 1925 – பெப்ரவரி 21, 1965) ஒரு குறிப்பிடத்தக்க ஆபிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச்சுப் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார். 1965 இல் படுகொலை செய்யப்பட்டார். He has been described as one of the greatest and most influential African Americans in history.

மார்ட்டின் லூதர் கிங்கும், மல்கம் எக்சும் முக்கியமானவர்களாய் கருதப்படுகின்றார்கள். இருவரும் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் (60களில்) மிகத் தீவிரமாய் இயங்கியவர்கள். அத்துடன் இருவருமே அவர்களின் நாற்பது வயதுகளை எட்டமுன்னராகவே படுகொலை செய்யப்பட்டவர்கள். 1992 இல் “Malcolm X” என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.
அன்றைய நேரம் அத்திரைப்படத்தை என்நண்பர்கள் மூவருடன் Lawrence & Markham த்தில் இருந்த Famous players இல் பார்த்ததை நினவு கூருகிறேன்.

மல்கமின் வாழ்க்கைச் சம்பவங்களினூடாக அன்றையகால கறுப்பின மக்களின் போராட்டங்களையும் தத்தளிப்புக்களையும் எழுச்சிகளையும் -அரைநூற்றாண்டு கடந்தபின்னரும் அத்திரைப்படம் மூலம் நேரில் பார்த்து மாதிரி அறியக்கூடிதாக இருந்தது. இன்றும் அவரின் சிரார்த்த தினம் அன்று அவரின் திரைப்படத்தை கனடிய தொலைக்காட்சியில் போட்டவிடத்து அவரை, அவரின் போராட்ட குணாம்சங்களை நினைவு கூறுமிடத்து தமிழக எழுத்தாளர் ரவிக்குமார் “மால்கம் எக்ஸ்” எனும் நூலைத் தொகுத்துள்ளார். அதில் அவரின் தொகுப்பிலிருந்தும் எனது இணையங்களின் தேடல்க்களுமிருந்தும் எனது “மல்கம் எக்ஸ்” பற்றிய சிறு புரட்டல்களை காலத்தின் தேவை கருதி இத்தருணத்தில் வாசகர்களுடன் பகிர்கிறேன்……….

Exit mobile version