ஜெகத் கஸ்பார் என்னும் பாதிரியார் இதுவரை புலிகளின் ஆதரவாளராக இருந்தார். இப்போது ராஜபட்சேவுடன் சேர்ந்து மீள்கட்டுமானத்திற்கான தேவையை வலியுறுத்து அதற்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயர்ச்சியில் இருக்கிறார். இனக்கொலைக்கு எதிரான அமைப்பு என்று சொல்லப்படும் நாம் எப்படி இனக்கொலை குற்றவாளியான ராஜபட்சேவுடனே கைகோர்க்கும் என்று நாம் கேட்டால் நம்மை துரோகி என்று எழுதுவார். அதற்கு நக்கீரன் இதழும் களம் அமைத்துக் கொடுக்கும். ஜெகத் கஸ்பார், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல். ஏ ரவிக்குமார் ஆகியோர் இந்த கூட்டமைப்பில் இருந்து இந்தியா வருகிற ராஜபட்சேவிடம் கோரிக்கை வைக்கிறார்களாம். ஆனால் ரவிக்குமார் இருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனோ ராஜபட்சேவின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு என்றழைக்கப்படும் டி.ஆர். பாலுவுக்கு இல்லாத தொழில்களே இல்லை எனலாம். மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களை நடத்தும் பாலு ஒரு எரிசாராய ஆலை அதிபரும் கூட, அது போல கருணாநிதியின் வாரிசுகளுக்கு இல்லாத தொழில்களே இல்லை எனலாம். காங்கிரஸ் எம்.எல். ஏக்களும் அப்படியே இது மாதிரியான ஒரு சூழலில் இவர்களும் வடக்குக் கிழக்கில் முதலீட்டிற்கு நிலவும் உகந்த சூழலை பயன்படுத்தி பல் தொழில்களையும் கைப்பற்றுவார்கள் என்று தெரிகிறது. இலங்கைச் சந்தையை குறிவைத்து கருணாநிதியின் குடும்பம் ஒரு தொலைக்காட்சியைத் துவங்கினாலும் நீங்கள் ஆச்சரிப்பட ஏதுமில்லை.