Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாரும் அக்கறைப்படாத யாழ். மீள் குடியேற்ற முஸ்லிம் குடும்பங்கள் !

யாழில் மீள்குடியேறுவதற்காக வந்துள்ள முஸ்லிம் குடும்பங்கள், தங்கள் விடயத்தில் யாரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை: தங்களின் மீள்குடியேற்றத்திற்கான போதிய உதவிகள் வழங்கப்படவில்லை எனக் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
யாழ்ப்பணா நகரத்தை அண்மித்த பகுதிளில் வாழ்ந்து யுத்தத்தினால் இடம் பெயர்ந்து சென்ற இவர்கள் நீண்ட காலத்தின் பின் குடியேற வந்திருக்கின்ற நிலையில், தமக்கான உதவிகளைச் செய்தற்கும் தமது பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கும் அரசாங்க அதிகாரிகளோ, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளோ, ஊடகங்களே முயற்சி செய்யவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
வசதிகளற்ற நிலையில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பெரும் சிரமங்களை தாம் எதிர்நோக்கியிருப்பதாகவும் தமக்கான வசதிகளை செய்து தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
யாழ்.மாநகர சபை நிர்வாகத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து மன்ற அமர்வுகளைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.
பொதுஜன ஐக்கிய முன்னணின் ஆட்சியின் கீழ் இயங்கும் யாழ.மாநகரசபையின் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து மாநகர சபையில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் மன்ற அமர்வுகளை புறக்கணித்தொடங்கியுள்ளன.
மாநகர சபையில் நிலவும் வெற்றிடங்களிற்கு, நியமனங்கள் தொடர்பிலான நடைமுறைகள் பின்பற்றப்படாது ஆட்கள் நியமிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியே எதிர்க்கட்சிகள் இந்த அமர்வுப் புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. கட்சி ரீதியில் ஆட்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அண்மைக்காலத்தில் பெருமளவான ஆட்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெருமளவானோர் நியமிக்கப்பட்டுள்ளதால் மாநகர சபை நிதிநெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மாநகர சபை நிர்வகாம் அடுத்த ஆண்டிலிருந்து அதிக வருமானத்தைப் பெறும் வகையில் மண்டப வாடகைகள், வாகனத் தரிப்பிட கட்டணங்கள், விளம்பரக் கட்டணங்கள் என்பவற்றை அதிகரித்துள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version