Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாருமே கேட்டிராத, ஓசையற்ற “உளியின் ஓசை” க்கு விருது கருணாநிதிக்கு ஜெ கடும் கண்டனம்.

சமீபகாலமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு விருது மேல் விருதுகளாக வழங்கப்படுகின்றன.பெரும்பாலான விருதுகள் அவரது கட்சி சார்ந்த, சகோதர அமைப்புகள் சார்ந்த விருதுகளாகவே இருக்கிற நிலையில் இம்மாதிரி விருதுகள் தொடர்பாக அதிமுக தலைவர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை ,

பிறரை வற்புறுத்தி தனக்கு பாராட்டு விழா எடுக்கச் சொல்வது; துதிபாடிகள் மத்தியில் உலா வருவது தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் புகழ் பாடுபவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்தச் சொல்லி புளகாங்கிதம் அடைவது; தனக்குத் தானே விருதுகளை அளித்துக் கொள்வது ஆகியவற்றை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி. இதை தன்னுடைய பல நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, அண்ணாவின் உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட போது கூட, அண்ணாவின் படத்தை விட கருணாநிதி, மு..ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் உச்ச நீதிமன்றத்தை விட ஒரு நடுநிலையான அமைப்பு இந்தியாவில் எதுவும் கிடையாது.அப்படிப்பட்ட நீதிமன்றங்களிடம் இருந்தே பலசான்றிதழ்களைபெற்றவர் கருணாநிதி! உள்ளாட்சித் தேர்தலை நடத்தி சாதனை புரிந்ததற்குசான்றிதழ்‘, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்து சாதனை புரிந்ததற்குசான்றிதழ்‘, நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், பொது மக்களையும் தாக்கியதற்குசான்றிதழ்‘, பந்த் நடத்தியதற்காகசான்றிதழ்என பலசான்றிதழ்களைஅடுக்கிக் கொண்டே போகலாம்.எல்லாவற்றிலும் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பங்கு வேண்டும் என்ற சுயநலப் போக்கை கடை பிடிக்காமல், நதி நீர்ப் பிரச்சனைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்சார வெட்டு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தினசரி தாக்குதல் ஆகியவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி, தமிழர்களின் துயர்களை துடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மைனாரிட்டி திமுக அரசின் முதல்வர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 

 

Exit mobile version