ஆய்வின் முடிவில் இந்து முன்னணியின் மாபெரும் கண்டுபிடிப்பு இதோ:
‘மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி போன்ற 26 பெயர்களை முகமூடியாகக் கொண்டு தமிழகம் முழுவதும் ஆயுத புரட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சென்னை புறநகர் ரயில்களில் தொடர்ந்து இவர்களது பிரச்சாரம், ஆயுத புரட்சிக்கு உண்டி வசூலும் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் மாணவர் தங்கும் விடுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பெயர்களில் தங்கி மாணவர்களை மூளை சலவை செய்து தங்கள் நாச வேலைக்கு கருவிகளாக மாற்றி வருகிறார்கள் நக்ஸல் பயங்கரவாதிகள். மாணவர்கள் தங்கும் விடுதிகளில் மாணவர்கள் இல்லாதவர்கள் தங்குவதைத் தடுத்து நிறுத்தி, மாணவர்களுக்குப் பாதுகாப்பு தந்து காப்பாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.’
சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் ஜனநாயகப் போராட்டங்களை நடத்தும் வெகுஜன அமைப்புக்களை ஆயுதம் ஏந்தத் தூண்டுவது அரசுகள் மட்டுமல்ல இந்து முன்னணி போன்ற பயங்கரவாத அமைப்புக்களுமே.
தமழ் நாட்டிலும், உலகம் முழுவதிலும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் பயங்கரவாதத்தைத் தூண்டும் இந்து முன்னணியின் செயலைக் கண்டிப்பதன் ஊடாக மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.