உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வாழும் இந்தியாவில் 30 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறந்துபோகிறார்கள். 18 மில்லியன் குழந்தைகள் தெருக்களில் வாழ்கிறார்கள்.
குழந்தைகள் விஷயத்தில் இந்தியாவின் நிலை பல ஏழை நாடுகளுடன் ஒப்பிடுகிற போது மிகத் தாழ்ந்துள்ளது. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 88 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி, உலக பசி குறியீடு 2010 ன்படி இந்தியாவின் இடம் 67. நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் மற்றும் ஏழை நாடுகளான சூடான், ருவாண்டா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகிற போதே இந்தியாவின் நிலை மோசமாக இருக்கிறது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் குறைந்த எடை கொண்டவர்களாக இருக்கிறார்ள். 2005-06ல் சுமார் 48 சதவிகித குழந்தைகள் வளர்ச்சி குறைந்தவர்களாக இருந்தனர். குழந்தைகளின் சராசரி ஆயுட் காலம் மற்றும் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விகிதாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு இது.
இன்றைய இந்தியா குறித்த மேல் மத்தியதர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கான வாழ்விடமாக மாறிவருகிறது. வழமையான முதலாளித்துவ சூழலில் காணப்படுகின்ற சமூகச் சமரசக் கொள்கைகள் கூட இங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை.