Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோதல்கள் தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களை அரசு அனுமதிக்கவேண்டும் .

31.01.2009.

வடபகுதியில் நடைபெறும் மோதல்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அரசாங்கம் நீக்கவேண்டுமென எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மோதல்கள் தொடர்பான செய்திகளை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் சுதந்திரமாக வெளியிடுவதற்கு அரசு அனுமதிக்கவேண்டுமென பாரிஸை தளமாகக்கொண்டியங்கும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமெனவும் அந்த அமைப்பு அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

ஊடகங்களையும் மனிதநேய அமைப்புகளையும் சுதந்திரமாக இயங்கவிடாமல் தடுப்பதற்கு கொழும்பிலுள்ள அதிகார சபைகள் தீர்மானித்தன.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் ஏற்படும் மனிதப்பேரவலங்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்படும் மக்கள் தொடர்பான அறிக்கைகளுக்கு மத்தியில் ஊடகங்களை சுதந்திரமாக இயங்கவிடாமல் அரசு தடுப்பது கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த 2007 ஆம் ஆண்டு வடபகுதியில் மோதல்கள் ஆரம்பித்தது முதல் அப்பகுதிகளுக்கும் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version