யுத்த மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தவிர்ப்பதற்கும் பாலியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கும் எதிரான மாநாடு எக்ஸெல் மண்டபத்தில் பெரும் பணச்செலவில் ஆரம்பமாகியுள்ளது. இம் மாநாடு பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் சிறப்புத் தூதரான ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஆகியோரின் இணைத் தலைமையில் நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. பிரித்தானியாவின் முக்கிய நகரங்களிலும் பிரதான சாலைகளிலும் பெரும் பணச்செலவில் விளம்பரப்படுத்தப்பட்டு இந்த மானாடு நடத்தப்படுகின்றது.
மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐநா பிரகடனத்தை அங்கீகரித்துள்ள எல்லா அரசாங்கங்களும் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் இராணுவ தொழிற்சார் நிபுணர்களும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாலியல் வன்முறையின் குறியீடும் அதனை விற்பனை செய்து பிழைப்பவருமான பொலிவூட் நடிகை, உலகம் முழுவதும் பாலியல் வன்முறையின் ஊற்றுமூலலமான பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுச் செயலாளர் ஆகியோர் நடத்தும் கேலிக் கூத்தான இந்த மாநாட்டிற்கு வெளியில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்துள்ளனர். பாலியல் வன்முறை தொடர்பான மிகப்பெரும் மாநாடு அதனைத் தூண்டுபவர்களாலேயே பெரும் பணச்செலவில் நடத்தப்படுவதைக் கண்டித்துப் பல பெண்கள் அமைப்புக்களும் எக்ஸெல் மண்டபத்தின் வெளியே ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன.இலங்கை அழைக்கப்படவில்லை என்பதால் மகிழ்ச்சியிலிருக்கும் தமிழ்த் தலைமைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள்.
மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐநா பிரகடனத்தை அங்கீகரிக்கும் அரசுகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
கைச்சாத்திட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் அழைப்புவிடுக்கபட்டுள்ளது. இலங்கை, இந்தியா உட்பட பலநாடுகள் இந்தப் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை என்பதால் அவை அழைக்கப்படவில்லை என்பதே உண்மை.