உலகம் முழுவதுமுள்ள பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் பெரும் பணச்செலவோடு கடந்த ஒரு தசாப்தங்களாக மோடி என்ற இனக்கொலையாளி குறித்த புனையப்பட்ட விம்பம் கட்டமைக்கப்பட்டது. இன்று நரேந்திர மோடி பிரதமராவது உறுதிப்படுத்தப்படுகிறது.
ஏப்ரல் மாதம் 7–ந் தேதி தொடங்கி கடந்த 12–ந் தேதி வரை அமைதியாக நடந்து முடிந்த இந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் தேசிய கட்சிகளின் சார்பில் 1,591 பேர், மாநில கட்சிகளின் சார்பில் 529 பேர், பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் 2,897 பேர், சுயேச்சையாக 3,234 பேர் என மொத்தம் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 66.38 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. 81 கோடியே 40 லட்சம் பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
543 தொகுதிகளின் முடிவுகளும் வெளியானதைத் தொடர்ந்து மத்திய புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரியவரும். அதன்பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம், தேர்தல் கமிஷனின் கெசட்டில் வெளியிடப்படும். இந்த கெசட் அறிவிப்புத்தான் 16–வது மக்களவையை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கையின் தொடக்கம் ஆகும்.
தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி புதிய அரசு அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை பின்னர் தொடங்கும். இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தியது. பாஜக ஆட்சி அமைப்பதற்கான 272 ஆசனங்களையும் பாஜக கூட்டணி தன்வசம் வைத்துள்ளது. காங்கரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இனக்கொலையாளியும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இப்போது பிரதமராவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,