பாதுகாப்பு படையினர் களைப்படையும் போது உடனுக்குடன் இன்னொருவரை பணியில் அமர்த்துவதற்கே இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. நரேந்திர மோடிக்கு நாட்டிலேயே மிக உயர்ந்த பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காணாத அளவிற்கு மோடி என்ற தனி நபருக்கு ஆதரவு திரட்டுவதற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனம் ஆப்கோ. அமெரிக்க நிறுவனமான ஆப்கோ குஜராத்தின் வளர்ச்சி என்ற பொய்யைக் கட்டவிழ்த்துவிடவும் அதற்கான தந்திரோபாயங்களை வகுக்கவும் மோடி குறித்து புனையப்பட்ட விம்பத்தை வழங்கவும் களமிறக்கப்பட்டது. இதற்காகச் செலவு செயப்பட்ட தொகை ஒரு நாளைக்கு 25000 டொலர்கள். இன்று நேற்றல்ல கடந்த ஏழு வருடங்களின் முன்பிருந்தே ஒவ்வொரு மாதமும் இத்தொகை செலவிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலிருந்து மோடியின் தாடியிலிருந்து இரத்தம் படிந்த கைகள் ஈறாக அழுக்கான பாதங்கள் வரை எவ்வாறு பராமரிப்பது என்பதைச் சொல்லிக்கொடுத்தது ஆப்கோ நிறுவனமே.
பல உலகின் சர்வாதிகாரிகளை அரசுத் தலைவர்களாக்கிய ஆப்கோவிற்கு ஹிட்லரை ஏற்றுக்க்கொள்ளும் நரேந்திர மோடியை பிரதமராக்க பணம் கொடுத்தவர்கள் பல்தேசியக் கொள்ளையர்கள். இன்று உலகைக் கொள்ளையிட பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு மோடி ராஜபக்ச போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஹரியாணாவின் ரெவாரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் பேரணியில் தொடங்கிய இவரது பிரச்சார பயணம் உத்தரப் பிரதேச மாநிலம் பலியாவில் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதுவரை 25 மாநிலங்களில் நடைபெற்ற 437 பொதுக்கூட்டங்கள், 3-டி தொழில் நுட்ப உதவியுடன் நடைபெற்ற 1,350 பேரணிகளில் மோடி பங்கேற்றுள்ளார். இதுதவிர, நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சுமார் 4,000 (தேநீர் கடை) குழுவினருடன் வீடியோ கான் பரன்ஸ் மூலம் மோடி கலந்துரையாடி உள்ளார்.