Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடி பாசிச அரசிற்கு எதிரான இந்திய அளவில் வேலை நிறுத்தம் : விவசாயிகள் அழைப்பு

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 12-வது நாளை எட்டியிருக்கும் நிலையில் இன்று
நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த முழு அடைப்பிற்கு  “பாரத் பந்த்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது நாடு தழுவிய அளவில் பேருந்துகளை இயக்க மறுத்து, ரயில் மறியல், வாகன மறியல்கள் நடக்கும்.  இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் 48 அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் திமுக, இடதுசாரிகள், உள்ளிட்டோர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.  இப்போராட்டத்தையொட்டி உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்  ஊர்வலமாக செல்ல மூயல அவரை காவல்துறையினர் கைது செய்ததால் உத்தரபிரதேச மாநிலத்திலும் போராட்டம் பரவி வருகிறது.
இப்போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,
“அதானி-அம்பானி சார்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். இந்த விவகாரத்தில் நான் விவசாயிகளின் பக்கம் நிற்கிறேன்” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல லட்சம் லாறிகளை இயக்கும் சங்கங்கள் நாளை லாறிகளை இயக்கப்போவதில்லை என அறிவித்துள்ளதால் விவசாயிகள் போராட்டம் காரணமாக நாடு தழுவிய அளவில் முழு முடக்கம் ஏற்படும் என்கிறார்கள் விவசாயிகள்.
Exit mobile version