Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடி பதவியேற்பு விழாவில் மகிந்த ராஜபக்ச:வை.கோ கலந்து கொள்வாரா?

Modiபாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரும் திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளுமாறு, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சார்க் -SAARC-எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த நிலையில் மோடிக்கு இணையான அடிப்படைவாதியும் இனக்கொலையாளியுமான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவில் மோடியின் பங்காளியான வை.கோ உம் கலந்துகொள்ள வாய்ப்புக்கள் உள்ளன.
இந்தியாவின் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களால் பிரதமராக்கப்பட்ட நரேந்திர மோடி, பதவியேற்கும் அதே வேளை கொழும்பின் ஒரு பகுதி இந்தியாவின் டாடா நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version