Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடி பதவியேற்பிற்கு ராஜபக்ச – கத்தி யார்கையில் : பொன்.ராதகிருஷ்ணன்

modi_pmசெய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மோடி பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்ததில் தவறு இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.இலங்கை தமிழர்கள் உயிரிழக்க காரணமான காங்கிரஸ் அரசு அன்று ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்ததாலேயே பாஜக எதிர்த்ததாகவும், அன்றிருந்த சூழலில் மன்மோகன் சிங் அழைத்ததையும், தற்போது மோடி அழைப்பதையும் ஒப்பிட கூடாது என்றும் கூறினார். மருத்துவர் கையில் இருக்கும் கத்தியும், கொலைகாரன் கையில் இருக்கும் கத்தியும் ஒன்று அல்ல என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழர் உட்பட அனைத்து தரப்பினரின் நலனும் மோடியின் அரசில் பாதுகாக்கப்படும் என்றம் கூறினார்.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் கொலைகளில் இந்திய அதிகாரவர்க்கம் கைதேர்ந்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சி முன்னர் ஆட்சி செய்த காலத்திலும் இந்திய இராணுவ உதவியுடன் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆனையிறவைப் புலிகள் முற்றுகையிட்ட போது அங்கிருந்து வெளியேறாவிட்டால் இராணுவத்தை அனுப்புவோம் என இலங்கை அரசு சார்பி ப.ஜ.க மிரட்டியது.

ஆக, தொழில் சார் கொலைகாரனின் கையில் தான் கத்தி உள்ளது என்பதை ராதாகிருஷ்ணன் மறைக்கிறார்.
இலங்கை தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டே அந்நாட்டு அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்துக்கு ராஜபக்ஷேவை அழைத்ததுகூட, அங்குள்ள பா.ஜ.க. மாநில அரசுதான். இதையெல்லாம்  தெரிந்துதான்  இனக்கொலை  மோடிக்கு  கூச்சமின்றி  வை.கோ  பிரச்சாரம்  செய்தார். அதுவும்  ஈழத்தமிழர்களின் அவலக் குரலாலைப்  பயன்படுத்தி!

Exit mobile version