மோடியும் ஜெயலலிதாவும் அரசியலில் ஒரே நேர்கோட்டில் பயணிப்பவர்கள்.
கொள்ளையடிப்பதற்குக் காங்கிரஸ் போன்ற பாரம்பரியக் கட்சிகள் கோட்ப்பாட்டுரீதியாக உடன்பட்டாலும் அவற்றின் தீவிரம் போதாது என்பதால் தொழில்முறைக் கொலைகாரர்களையும் பாசிஸ்டுகளையும் அதிகாரவர்கம் ஆட்சியில் அமர்த்துகின்றது.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், பாரதீய ஜனதா குறித்து வாய்திறக்காத ஜெயலலிதா காங்கிரசையும் தி.மு.கா வையும் சாடியுள்ளர். அதேவேளை ஜெயலலிதாவின் குரலில் பேசும் சீமான் ஜெயலலிதாவின் வெற்றி மதசார்பின்மைக்குக் கிடைத்த வெற்றி என்கிறார். திராவிடப் பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட தமிழகத்தில் மோடிக்கு ஆதரவு கிடைக்காது என்ற்வு தெரிந்துகொண்ட காப்ரட் அதிகார பீடம் பெண் மோடியாகச் செயற்படத்தக்க ஜெயலலிதாவைப் பெரும் பணச்செலவில் பதவியில் அமர்த்தியது. ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையின் முழுமை:
எனது பிரசாரக் கூட்டங்களில் ஊழல் புரையோடிய காங்கிரஸ் கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு எதிரான காங்கிரஸ் கூட்டணியின் துரோகச் செயல்களுக்கு துணைபோன திமுகவை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை உறுதிப்படுத்த, தேவையானவற்றை பெற்றுத்தர மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்தேன்.
மக்கள் நலன்கள் குறித்துப் பேசாமல், தங்களது கட்சி வெற்றி பெற்றால் என்னென்ன நன்மைகள் இந்திய மக்களுக்கு, குறிப்பாக தமிழக மக்களுக்குக் கிடைக்கும் என்பதைப் பற்றி விளக்காமல், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் என் மீதும், எனது தலைமையிலான அரசின் மீதும் புழுதிவாரி இறைப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
அவர்களின் அர்த்தமற்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு, அதிமுகவை 37 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்து எதிர்க்கட்சிகளுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
எனது தலைமையிலான அதிமுக அரசு மூன்றாண்டுகள் நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளில் இந்த வெற்றி கிடைத்துள்ளது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.