நரேந்திர மோடி இன்று – 26.05.2014 – இந்தியாவின் பிரதமராக 45 அமைச்சர்களுடன் பதவியேற்கவுள்ளார். இன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், நரேந்திர மோடியுடன் 23 மத்திய அமைச்சர்களும், 10 இணை அமைச்சர்களும், 11 தனி பொறுப்பு அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்காக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நவ நாசிகள் என்றழைக்கப்படும் மனிதகுல விரோதிகள் உலகம் முழுவதும் பாரளுமன்ற அரசியல் முறைமை ஊடாக ஆட்சிக்கு அதிகாரத்தைக் கையகப்படுத்துகின்றனர். இந்தியாவின் இனக்கொலையாளியும் நாசிகளை ஆதரிக்கும் ஆ.எஸ்.எஸ் இன் முக்கிய உறுப்பினருமான நரேந்திர மோடி சிறையிலிருப்பதற்குப் பதிலாக ஆட்சி அதிகாரத்தில் தண்டிக்கப்படாமல் அமர்தப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.
முன்பு ஆட்சியதிகாரத்திலிருந்த காங்கிரஸ் கட்சியின் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் சுரண்டலும் நரேந்திர மோடி போன்ற போர்க்குற்றவாளியை ஆட்சியிலமர்த்தியுள்ளது. பல்தேசிய வியாபார நிறுவனங்களின் தயவில் ஆட்சியிலமர்ந்துள்ள மோடி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களை அழித்து இந்தியாவை கொள்ளையர்களின் கரங்களில் முழுமையாக ஒப்படைப்பார் என்பது வெளிப்படையானது. குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள், வெளிநாட்டு தலைவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்ட சுமார் 4,000 பேர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.
நரேந்திர மோடியுடன் 18 கேபினட் அமைச்சர்கள், 16 இணை அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
அமைச்சர்கள் – துறைகளின் விவரங்கள்:ராஜ்நாத் சிங் – உள்துறை (உள்நாட்டு பாதுகாப்பு தனித் துறையாகிறது)அருண் ஜெட்லி – நிதித் துறை,சுஷ்மா சுவராஜ் – வெளியுறவுத் துறை,நிதின் கட்கரி – போக்குவரத்து,ரவி சங்கர் பிரசாத் – தகவல் ஒலிபரப்புத் துறைடாக்டர் ஹர்ஷ்வர்தன் – சுகாதாரத் துறைஇதுதவிர வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பூனம் மகாஜன், கிரித் சோமையா, கல்ராஜ் மிஸ்ரா, அனந்தகுமார், சுமித்ரா மகாஜன், உமாபாரதி, சத்யபால் சிங், முன்னாள் ராணுவ ஜெனரல் வி.கே.சிங், பா.ஜ. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.மேலும், கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, மகாராஷ்டிர பா.ஜ. மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, தர்மேந்திர பிரதான், சந்தோஷ் கங்வார், நஜ்மா ஹெப்துல்லா, பியூஷ் கோயல், ம.பி. தலைவர் தவார் சந்த் கெலாட் ஆகியோரும் அமைச்சர் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது
விஜய குமர் சிங் என்ற முன்னை நாள் இந்திய இராணுவத் தளபதி, இந்திய அமைதிகாக்கும் படை என்ற ஆக்கிரமிப்புப் படையுடன் இலங்கையில் பணியாற்றியவர். 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையில் நடத்திய ஒப்பரேஷன் பவான் என்ற கொலைவெறி இராணுவத் தாக்குதலிலைத் தலைமை தாங்கியவர். இராணுவத் தளபதியாகவிருந்த காலத்தில் இலங்கை இராணுவத்துடன் பல ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். மோடியின் அரசுத்துறை அமைச்சராகப் பதவியேற்கும் வி.கே சிங் முன்னதாக பிறப்பு அத்தாட்சிப் பத்திர மோசடி தொடர்பான சர்ச்சையிலும் சிக்குண்டவர்.
தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற மாநில பா.ஜ. தலைவரும் பழ.நெடுமாறனின் முள்ளிவாய்க்கால்முற்றம் திறப்பில் முக்கிய புள்ளியுமானபொன்.ராதாகிருஷ்ணனும் அமைச்சராகிறார்.