இந்நிலையில் டெல்லியில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மன்மமோகன் சிங் “என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பெரியவர்கள் இவ்வாறு செய்கிறார்களே” என்றார்.
இந்தியாவில் இந்துத்துவ பாசிச அரசியலையே பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெவ்வேறு அளவுகளில் முன்னெடுத்து வருகின்றன என்பதற்கு மன்மோகனின் சகோதரனின் இணைவு ஒரு குறியீடு. இந்திய அதிகார வர்க்கம் இவ்விரு கட்சிகளையும் தமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறது. ஹிட்லர் போன்ற மனிதக் கொலையாளிகளை நேரடியாக ஆதரிப்பதாகக் கூறும் ஆர்.எஸ்.எஸ் உம் அதன் துணைக்குழுவான பாரதீய ஜனதாக் கட்சியும் கருத்தளவில் காங்கிரசோடு உடன்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் பிரித்தானியர்கள் ஒட்டிவிட்டுச் சென்ற ஜனநாயகம் பல்தேசிய நிறுவனங்களிடமே உள்ளது. தேர்தல்கள் அவற்றை விடுதலை செய்யாது.
முன்னதாக பிரதமரின் சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்: தல்ஜித் சிங் கோலி பாஜகவில் இணைந்தது மொத்த குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பாஜகவில் இணைந்த அவரது நோக்கம் தெரியவில்லை. இருப்பினும் அவர் விரும்பும் அரசியல் வாழ்க்கையை தேர்வு செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது. பிரதமருக்கும் அவரது சகோதரருக்கும் பல ஆண்டுகளாக எவ்வித தொடர்பும் இல்லை. இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.