Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடியின் புதிய அமைச்சரவை : IPKF சிங் உம் சுஷ்மா சுவராஜும் வெளியுறவு

sushmaமோடியின் அமைச்சரவையில் நேற்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ஜெனரல் வி.கே.சிங், வடகிழக்கு மாநிலங்களுக்கான (இணையமைச்சர் தனிப் பொறுப்பு) அமைச்சகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.மேலும், வெளிவிவகாரங்கள் துறை இணையமைச்சர் தனிப்பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முறைப்படி தனது பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்டார். சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபக்சவை 2012 ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சென்று சந்தித்த சுஷ்மா சுவராஜ் இலங்கை அரசு பயங்கரவாததை வெற்றிகொண்டது என அறிவித்தவர். வி.கே.சிங் இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையில் நிலைகொண்டுருந்த போது முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியவர். ஒப்பரேஷன் பவன் என்ற கோரமன இராணுவ நடவடிக்கையைத் தலைமை வகித்தவர்களுள் ஒருவர். இந்திய இராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் அதன் துணைப்படைகளோடு ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவித்தத்து.

புதிய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை அமைச்சரான அருண் ஜேட்லி கூடுதலாக பாதுகாப்புத் துறையையும் கவனிப்பார்.

சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சு நிதின் கட்கரியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

நகர்புற அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு ஆகியத்துறைகளுக்கு வெங்கைய்யா நாயிடு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் தொகுதியிலிருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜிதேந்திர சிங், பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதர முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் வருமாறு:

ரயில்வேத்துறை : சதானந்த கவுடா

தொலைத் தொடர்பு மற்றும் சட்டம் : ரவிசங்கர் பிரசாத்

சிறுபான்மையினர் நலன் : நஜ்மா ஹெப்துல்லா

சுகாதாரம் : ஹர்ஷ் வர்தன்

விவசாயம் : ராதா மோகன் சிங்

சமூக நலம் மற்றும் வலுவூட்டல் :தாவர் சந்த் கெஹலோட்

பழங்குடியினர் நலன் : ஜுவல் ஓராம்

நீர்வளம் மற்றும் கங்கை நதி மேம்பாடு : உமா பாரதி

நுகர்வோ நலன், உணவு மற்றும் பொது விநியோகம் : ராம் விலாஸ் பாஸ்வான்

கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் : ஆனந்த் கீதே. இந்தத்துறையின் துணை அமைச்சராக பொன் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர்களான நிர்மலா சீதாராமனுக்கு வணிகத்துறையோடு, நிதித்துறையும், பிரகாஷ் ஜவ்டேகருக்கு செய்தி ஒலிபரப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version