குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2004ம் ஆண்டு மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் (19) உட்பட 4 பேரை போலீசாரும், புலனாய்வு துறையினரும் சேர்ந்து என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அவர்கள், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும், குஜராத் முதல்வர் மோடியை கொல்லும் திட்டத்துடன் குஜராத்தில் ஊடுருவியதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதேநேரத்தில், இந்த வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டுவந்த குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அமித் ஷாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. இதுபற்றி இஷ்ரத் ஜஹானின் உறவினர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கடந்த ஆண்டு ஜூலை மாதம், முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நடைபெற்று வரும் ஆமதாபாத் நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் எச்.எஸ். குத்வத் முன்னிலையில் சிபிஐ இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
அதில், “குஜராத் போலீஸாரும், ஐ.பி. அதிகாரிகளும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி இஷ்ரத் உள்ளிட்ட 4 பேரை கடத்திச் சென்று பின்னர் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். இதற்காக அப்போது ஐ.பி. இணை இயக்குநராக பணியாற்றி வந்த ராஜேந்தர் குமார், குஜராத் போலீஸ் அதிகாரி கிரீஷ் சிங்காலுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளார். அவர் அதை அப்போதைய காவல்துறை துணை கண்காணிப்பாளர் தருண் பரோட்டிடம் வழங்கியுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக உளவுப் பிரிவின் முன்னாள் சிறப்பு இயக்குநராக கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ராஜேந்தர் குமார், அவருக்கு உதவியதாக அந்தப் பிரிவின் அதிகாரிகள் பி. மித்தல், எம்.கே. சின்ஹா, ராஜீவ் வாங்கடே ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு, ஆள் கடத்தல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்துபாசிச அதிகார வர்க்கத்தின் அடியாட்களான அரசதுறைகள் மோடியினூடாக பாசிச அரசை நிறுவத் துண போகின்றனர். இனக்கொலையாளி மோடி இந்தியவின் எதிராகப் பிரதமராகும் கனவில் திழைத்திருக்க, இனக்கொலையாளிகளைக் கைதுசெய்ய காங்கிரஸ் முயற்சிசெய்யவில்லை.
இஷ்ரத் ஜஹானின் உறவினர் ரவூஃப் லாலா தெரிவிக்கும் போது. “இந்த வழக்கில் கொலை செய்தவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இந்த என்கவுன்ட்டரால் ஆதாயம் அடைந்தவர்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் என்றார்.