Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடிக்கு உத்தரவிடும் பல்தேசிய எஜமான்:உருகிய இரும்பு மனிதன்

அனில் அக்ரவால்
அனில் அக்ரவால்

இந்தியப் பிரதமராக்கப்பட்ட நரேந்திர மோடியின் தேர்தல் செலவிற்குப் பணம் வாரியிறைத்த பல்தேசிய நிறுவனங்களுள் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இந்தியப் பண முதலைகளின் நிறுவனமான வேதாந்தாவும் ஒன்று. நாடுகளின் இயற்கை வளங்களை மலிவு விலையில் சுரண்டி உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும் வேதாந்தா நிறுவனம் ஆபிரிக்க நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் மக்களை வாழ் நிலங்களிலிருந்து பிடுங்கியெறிந்துள்ளது. வேதாந்தாவின் பிரதம நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான அனில் அனில் அக்ரவால் ‘இரும்பு அடிமை’ மோடிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனில் அக்ரவால் கூறியதாவது,

‘இந்தியா அதி உயர் வளங்களைக் கொண்ட நாடு. உலகில் அதிக அளவிலான இயற்கை வளங்களைக் கொண்ட நாடு. இந்தியாவின் வளங்கள் உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் இந்தியா செல்வந்த நாடாகும்.’

இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளின் வளங்களைச் சுரண்டிப் பெற்றுக்கொள்ளும் இலாபத்தை பிரித்தானியச் சட்டைப்பைக்குள் போட்டுவத்திருக்கும் அனில் அக்ராவால் என்ற பல்தேசியக் கொள்ளைக்காரன், இந்தியாவைச் செல்வந்த நாடாக்குவது குறித்துப் பேசுவது வியப்பானது.

பல்தேசிய நிறுவனங்களின் பணத்தால் அவற்றிற்குச் சேவையாற்றும் நோக்குடைனேயே ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட நரேந்திர மோடி, தனது எஜமானர்களுக்கு விசுவாசமாகச் செயற்படுகிறார். அதனைத் தவிர அவரால் வேறு எதனையும் செய்ய முடியாது.

வருடத்திற்கு 500 மில்லியன் ஊதியமாகப் பெறும் அனில் அக்ரவால் போன்ற பல்தேசியக் கொள்ளையர்களே இன்று அரசாங்கத்தையும் அரசியல் வாதிகளையும் தீர்மானிப்பவர்கள்.

இதே வேதாந்தா இராணுத்தின் கோரப்பிடிக்குள் வாழும் இலங்கையின் வட கிழக்குத் தமிழர்களின் கடற்பகுதியில் பெற்றோல் கொள்ளையிடுவதற்காக ராஜபக்ச உடன் ஒப்பந்தமிட்டுள்ளது என்பது இங்கு குறித்த்க்காகட்டத் தக்கது.

Exit mobile version