புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரிஸ் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
சட்டத்தரணிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மொஹான் பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள சூழ்நிலையில், நாட்டின் உச்சநீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஷிராணி உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு தகவல் வழங்க அங்கு கூடியிருந்த பாதுகாப்புப் படைகளால் மறுக்கப்பட்டது. இதனால் ஊடகவியலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சிறிதுநேர முறுகல் நிலை காணப்பட்டது.