இலங்கையின் பிரபலமான மொழியியலாளரும் எழுத்தாளருமான சுசரித்த கம்லத் காலமானர்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன.
ஆங்கில-சிங்கள மொழி அகராதியை வடிவமைத்தவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.
இடதுசாரி அரசியல் சிந்தனையாளராகக் கருதப்பட்ட கம்லத் இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்காகக் குரல்கொடுத்த விரல்விட்டெண்ணக்கூடிய சிங்கள செயற்பாட்டாளர்களுள் ஒருவர்.