அதே வேளை ரனில் விக்ரமசிங்க மகிந்தவிற்கு எதிராக நடவடிக்கைகளுக்குத் தடையாகவிருப்பதாக மைத்திரி அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மைத்திரி – ரனில் முரண்பாடுகளின் மத்தியில் மகிந்த மீண்டும் அரசியலுக்குள் நுளைய முற்படுவதாக பொதுவான கருத்து நிலவுகின்றது.
தான் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி புதியகட்சியை ஆரம்பிக்கப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டாவது பாராளுமன்றத்திற்கு மீண்டும் செல்வேன் என அவர் கூறியுள்ளார். இறுதியில் தேர்தல் என்பது ராஜபக்ச குடும்பத்தின் மீதான போர்க்குற்ற விசாரணைகளைக் கிடப்பில் போடுவதற்கு மட்டுமே உதவியுள்ளது.
தவிர, அமரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான துணை அரச துறைச் செயலாளர் நிஷா பிஸ்வாலின் இலங்கைப் பயணத்தின் பின்னர் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தணிந்துள்ளன. அமெரிக்காவின் நேரடி அடியாளாகச் செயற்படும் ரனில், மகிந்தவிற்கு எதிரான நடவடிக்கைகளைப் பின்போடுவடுவதற்கு அமெரிக்க அரசு பின்னணியில் உள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களும், சிங்கள ஒடுக்கப்படும் மக்களும் தேர்தல் அரசிலுக்கு அப்பால் அணிதிரள்வது இன்று அவசியமானது.