Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மைத்திரி மௌனவிரதம்

maaduluwave-sobithaஜனநாயகம் குறித்தும் நல்லாட்சி குறித்தும் வாய் கிழிய பேசிய மைத்திரிபால சிரிசேன மகிந்தவிற்கு வேட்புமனு வழங்கியமை தொடர்பாக எதையும் பேச மறுக்கிறார். சந்திரிக்க உட்படப் பலர் மைத்திரியிடம் கருத்துக் கேட்க முடியாமலிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களைப் பழிவாங்குவார் என சோபித தேரர் தெரிவித்துள்ளார். மகிந்த ஆட்சியில் மனித உரிமைக்காகக் குரல்கொடுத்து தாக்குதலுக்கு உள்ளான சோபித தேரர் போன்ற பல மனிதாபிமானிகள் மைத்திரியின் பதிலை எதிர்பார்த்திருக்கின்றனர்.

சோபித தேரரிடம் மகிந்தவிற்கு அனுமதி வழங்கவில்லை எனக் கூறும் மைத்திரி இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச் சம்பவம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாதமையினால் தனக்கு இது தொடர்பில் கருத்தை வெளியிட முடியவில்லை என மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள செய்தி சேவை ஒன்று இன்று காலை அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி எனக்கு எதுவும் தெரியாதென பதிலளிக்க முடியாது.

தெளிவான உத்தியோக பூர்வ பதில் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version