Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மைத்திரியைத் தாக்க வேண்டாம் : மகிந்த பரிந்துரை

mr_speakமைத்திரியைத் தாக்க வேண்டாம் என மகிந்த ராஜபக்ச தனது சகாக்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. மைத்திரிபால சிரிசேனவினால் வழங்கப்பட்ட வேட்பாளர் நியமனத்தைத் தொடர்ந்து மேல் மாகாண முதலமைச்சரைச் தனது சகாக்கள் சகிதம் சந்தித்த போதே போர்க்குற்றவாளி மகிந்த இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவே தனக்கு நியமனம் வழங்கினார் என்றும் அதற்காக மைத்திரியைத் தாக்க வேண்டாம் என்றும் அதனைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் மகிந்த தெரிவித்தார்.

இதே வேளை, நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான மிகப் பெரிய துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் அழைப்பாளர் காமினி வியான்கொட தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்திருந்தால் அது சுதந்திரத்தின் பின்னரான மிகப் பெரிய துரோகச் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version