ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவே தனக்கு நியமனம் வழங்கினார் என்றும் அதற்காக மைத்திரியைத் தாக்க வேண்டாம் என்றும் அதனைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் மகிந்த தெரிவித்தார்.
இதே வேளை, நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான மிகப் பெரிய துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் அழைப்பாளர் காமினி வியான்கொட தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்திருந்தால் அது சுதந்திரத்தின் பின்னரான மிகப் பெரிய துரோகச் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.