Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மைத்திரியின் ‘புதிய அரசியல் கலாச்சாரத்தை’ ஆதரிக்கும் திருடர்களும் கொலையாளிகளும்

ministersபாசிஸ்ட் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு பதவியிறக்கப்பட்ட பின்னர் புதிய அரசியல் கலாச்சாரம் என்று ஆரம்பித்த மைத்திரிபால சிரிசேனவின் தலைமையிலான அரசிற்கு மகிந்த அரசின் கூட்டுத் திருடர்கள் பலர் ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர். ராஜபக்சவுடன் இணைந்து இலங்கையைச் சூறையாட அனுமதிக்கப்பட்டவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் சஜின் வாஸ் குணவர்தன என்ற கடத்தல் வியாபாரியும் ஒருவர். இந்திய நிறுவனமான கிரிஷ் குழுமத்துடனான ஊழலிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இவர் பொறுப்பானவர். பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் தனது குற்றங்களிலிருந்து விடுபடுவதற்கு இலகுவான வழி, மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பது எனத் தெரிந்துகொண்டு இன்று அவரைச் சந்திது தனது ஆதரவை வெளிப்படுத்தினார். முன்னை நாள் பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதர் கிரிஸ் நோனிசை நையப்புடைத்த சஜின் இன்று மைத்திரியின் அணியில்.

முன்னைய சர்வாதிகார அரசின் துணைக் குழுக்களாகச் செயற்பட்ட ஈ.பி.டி.பி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் போன்றனவும் மைத்திரிக்கு ஆதரவளித்துப் பாவங்களைக் கழுவிக்கொண்டன. டக்ளஸ் தேவாந்தாவின் வியாபாரம், கடந்த காலச் சமூகவிரோதச் செயல்கள் இனிப் பாதுகாக்கப்படும்.

உலகின் மிகப்பெரும் படுகொலைகளில் ஒன்றான வன்னிப்படுகொலையின் போது இனப்படுகொலைக்கு ஆதரவாகச் செயற்பட்ட கருணா டக்ளஸ் போன்றவர்கள் ஆரசில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்கிறார்கள். ஆனால் வெளியிலிருந்து அவர்களின் ஆதரவு பெறப்படும் என்று மைத்திரி – ரனில் தரப்புக் கூறுகிறது. அதன் மறுபக்கத்தில் அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதே உண்மை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு:-
01.ரணில் விக்ரமசிங்க – பிரதமர், கொள்கை வகுப்பு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
02.ஜோன் அமரதுங்க – பொதுசன அமைதி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்
03.ஜோசப் மைக்கள் பெரேரா – உள்விவகார அமைச்சர்
04.காமினி ஜயவிக்ரம பெரேரா – உணவு பாதுகாப்பு அமைச்சர்
05.மங்கள சமரவீர – வெளிவிவகார அமைச்சர்
06.கரு ஜயசூரிய – புத்தசாசன அமைச்சர்
07.லக்ஷமன் கிரியெல்ல – பெருந்தோட்டத்துறை அமைச்சர்
08.ரவி கருணாநாயக்க – நிதி அமைச்சர்
09.ரவுப் ஹக்கீம் – நகர அபிவிருத்தி, நீர்வள, நீர்முகாமைத்துவ அமைச்சர்
10.பாட்டளி சம்பிக்க ரணவக்க – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
11.ராஜித சேனாரத்ன – சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
12.துமிந்த திஸாநாயக்க – நீர்பாசன அமைச்சர்
13.கபீர் ஹசிம் – பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
14.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன – காணி அமைச்சர்
15.சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
16.விஜேதாஸ ராஜபக்ஷ – நீதி அமைச்சர்
17.கயந்த கருணாதிலக – ஊடகத்துறை அமைச்சர்
18.நவீன் திஸாநாயக்க – சுற்றுலாத்துறை அமைச்சர்
19.அர்ஜுன ரணதுங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
20.அப்துல் ரிசாத் பதியூதின் – தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்
21.பழனி திகாம்பரம் – தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22.டி.எம்.சுவாமிநான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர்
23.அக்கிலவிராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர்
24.தலதா அத்துகொரல்ல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு
25.ரஞ்சித் மத்தும பண்டார – உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர்
26.பி.ஹெரிசன் – சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்
27.சந்திராணி பண்டார – மகளிர் விவகாரம்

Exit mobile version