மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு மே 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த முன்னணியின் மாநில அமைப்பாளர் பி. சம்பத்,தமிழ்நாட்டில் நிலவும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை தமிழக அரசு ஒழிக்க வேண்டும். தலித் மக்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் ஜனவரி 28, 29 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டை அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே. வரதராஜன் தொடக்கி வைக்கிறார். இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்றார்.