மே 18 இன அழிப்பு போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கவும், இனப்படுகொலைக்கு துணைநின்ற மன்மோகன் அரசை திரைகிழிக்கவும், ஈழமக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தினர்.
சென்னை
சென்னையில் சைதை பனகல் மாளிகை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளும், கூடவே சிறுவர்களும், பெண்களும் ஏராளமாகப் பங்குபற்றினர்.
திருச்சி
திருச்சியில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பாக கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஆர்ப்பாட்டம் புத்தூர் நாலு ரோடு பகுதியில் நடைபெற்றது.
கோவை
கோவையில் புஜதொமு தோழர் விளவை ராமசாமி தலைமையில் ம.க.இ.க தோழர் மணிவண்ணன் உரையாற்ற மே 18 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போரை நடத்திய உலக நாடுகளைப் பற்றியும், ராஜீவ் சாகாவிடினும் தரகுமுதலாளிகளுக்காக இந்தப் போர் நடைபெற்றே தீரும் என்பதை விளக்கியும், உள்நாட்டில் இந்தியா தன் மக்கள் மீதே முதலாளிகளுக்கு ஆதரவாக தொடுத்திருக்கும் போர்கள் பற்றியும் விளக்கி தோழர்கள் உரையாற்றினர்.
போர்க்குற்றவாளியான ராஜபக்ஷே மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைத் தண்டிக்கக் கோரும் ஆர்ப்பாட்டம் மே 18 அன்று சிவகங்கை அரண்மனை வாயிலின் முன் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாமாண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ம.க.இ.க வைச் சார்ந்த தோழர் மயில்வாகனன் உரையாற்றினார். புஜதொமு தோழர் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி
தருமபுரியில் விவிமு தோழர்கள் காலை 11 மணிக்கு ராஜகோபால் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.