Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோசமடையும் அகதிகள் நிலவரம்

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள மக்கள் பெரும் அவலத்துக்குள்ளாகியுள்ளானர்.

அரசின் அறிவித்தலின் படி – இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டப்பட்டுள்ளது.ஆனாலும் அவர்களில் பெரும் பகுதியினர் இன்னமும் வவுனியா வந்து சேரவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

படைத்தரப்பின் தகவலின்படி 80 ஆயிரம் வரையான மக்கள் இன்னமும் ஓமந்தையில் பதிவுகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா பகுதியில் குடிப்பதற்கு, குளிப்பதற்கு இயற்கை கடன்களின் வசதிக்கு தேவையான தண்ணீர் முற்றுமுழுதாக அற்ற நிலை உள்ளது.அதேவேளையில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளதாக அறிய முடிகின்றது.

Exit mobile version