மகாத்மா காந்தி குறித்து அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தை இந்தியாவில் விற்க மத்திய அரசு தடை விதிக்கலாம் எனத் தெரிகிறது.
அமெரிக்காவை சேர்ந்த புலிட்ஸ் விருது வென்ற பிரபல எழுத்தாளர் ஜோசப் வேலிவெல்ட் என்பவர் மகாத்மா காந்தி பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.
மகாத்மா காந்தி இருபால் உறவு கொள்பவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த புத்தகத்திற்கு இந்தியாவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அப்புத்தகத்திற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ள அரசு,அப்புத்தகத்தை மராட்டிய மாநிலத்தில் பதிப்பு செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசும் இப்புத்தகத்திற்கு இந்தியா முழுவதும் தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இது குறித்து புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, இந்தியாவின் தேசத் தந்தையை அவமதிப்பது இந்தியாவையே அவமதிப்பதாகும் என்று கூறினார்.