Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேற்கு வங்க ரயில் கவிழ்ப்பு மாக்ஸ்சிஸ்டுகளின் சதியே காரணம்- மாவோயிஸ்டுகள்.

மேற்கு வங்கம் மிதினாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் சதி வேலை காரணமாக தண்வாளம் தகர்க்கபப்ட்டத்தில் சிக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயிலுடன் மோதியதில் 120-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ரயில் கவிழ்ப்புச் சதிக்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்று மத்திய அரசும் ரயில்வேதுறையும், மேற்குவங்கத்தை ஆளும் சி.பி.எம் கட்சியினரும் கூறிவந்தனர். மாவோயிஸ்டுகளோ இத்தாக்குதலுக்கு நாங்கள் கரணமல்லா இத்தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கவும் இல்லை என்றும் மறுத்தனர். இந்நிலையில் மாவோயிஸ்டு

ஆதரவு அமைப்பான போலீஸ் அராஜகத்துக்கு எதிரான மக்கள் கமிட்டி (பிசிபிஏ) ஒருங்கிணைப்பாளர் அசித் மஹதோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ரயில்களைக் குறிவைப்பது எங்கள் நோக்கமல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 உள்ளூர் தலைவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு அருகில் 15 நாள்களுக்கு முன் முகாம்களை நிறுவியுள்ளனர். எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து எங்களைப் பிரிக்கவே இந்த சதித்திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீட்டியுள்ளனர். இதன் மூலம் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியையும் அரசியல்ரீதியாக தனிமைப்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜங்கல்மகால் பகுதியில் ஊர்வலம் நடத்தப்படும் என்றார். ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் ரயில் கவிழ்ப்பு சம்பவம் தனக்கு எதிரான அரசியல் சதி என்று சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் கவிழ்ப்பு தொடர்பாக் துவக்கத்தில் வந்த தகவ்லகளை விட இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.

Exit mobile version