ஆதரவு அமைப்பான போலீஸ் அராஜகத்துக்கு எதிரான மக்கள் கமிட்டி (பிசிபிஏ) ஒருங்கிணைப்பாளர் அசித் மஹதோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ரயில்களைக் குறிவைப்பது எங்கள் நோக்கமல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 உள்ளூர் தலைவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு அருகில் 15 நாள்களுக்கு முன் முகாம்களை நிறுவியுள்ளனர். எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து எங்களைப் பிரிக்கவே இந்த சதித்திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீட்டியுள்ளனர். இதன் மூலம் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியையும் அரசியல்ரீதியாக தனிமைப்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜங்கல்மகால் பகுதியில் ஊர்வலம் நடத்தப்படும் என்றார். ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் ரயில் கவிழ்ப்பு சம்பவம் தனக்கு எதிரான அரசியல் சதி என்று சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் கவிழ்ப்பு தொடர்பாக் துவக்கத்தில் வந்த தகவ்லகளை விட இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.