எதிர்வரும் வருடங்களில் பொருளாதார அழிவைச் சந்திக்கும் என்று எதிர்வுகூறப்படும் நிலையில் அமரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளில் மக்கள் போராட்டங்களும் அரசியல் எழுச்சிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றை அழிப்பதற்கு புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. பொஸ்டன் குண்டுவெடிப்பு மற்றும் சாண்டி ஹூக் படுகொலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் அரசுகள் மக்கள் எதிர்ப்பின்றியே மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை உருவாக்கிக்கொள்கின்றன.
பொஸ்டன் குண்டுவெடிப்பைக் காரணம்காட்டி கனடாவில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக ஹார்பரின் அரசு முன்மொழிந்துள்ளது. கைது செய்வதற்கும் விசாரணையின்றி சிறையிலடைப்பதற்குமான அதிகாரங்களைப் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கவேண்டும் என்று கடந்த திங்களன்று கனேடியப் பாராளுமன்றத்தில் விவதிக்கப்பட்டது.