Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேர்வின் டீ சில்வா செயல் வீரர் : பௌத்த மதபீடம்

அனுராதபுர பௌத்த மதபீடமான மஹா விகாரை அமைச்சர் மேர்வின் டீ சில்வாவிற்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. பல வன் முறைகளில் நேரடியாகவே ஈடுபட்டவரும், கொழும்பு நிழல் உலகத் தாதாவுமான மேர்வின் டீ சில்வா பல கொலைகளிலும் தொடர்புடையவர். இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாகினி அலுவலகத்தினுள் புகுந்து அதன் பணிப்பாளரைத் தாக்கியதிலிருந்து சிரச தொலைக்காட்சி எரிப்பு வரையிலான பல ஊடக வன்முறைச் சம்பவங்களுடன் மேர்வின் தொடர்புடையவர்.
பௌத்த மதபீடம் பௌத்த சாசனத்தின் செயல்வீரர் என்ற பட்டத்தை மேர்வினுக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது. பல பௌத்த மத் குருக்கள் இந்த நிகழ்வு குறித்து அதிர்ப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version