இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதம நீதியரசரை குற்றவாளி எனத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு கிடையாது என தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு தலைமை நீதிபதியைக் குற்றம் சுமத்துவதற்கு சட்டரீதீரிதியான அதிகாரமோ ஆணையோ கிடையாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறும் 78 ஆணை ஒரு சட்டம் அல்ல என மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இலங்கையில் காணப்பட்ட குறைந்தபட்ச ஜனநாயகத்தையும், சட்டம், ஒழுங்கு, மதம், கலாச்சாரம் என்ற அனைத்து அமைப்புக்களையும் ராஜபக பாசிச ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் நிலையில் இத் தீர்ப்பு ராஜபக்ச பாசிசத்திற்கு மிகப்பெரும் சவால்.
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ராஜபக்ச அரசு முன்மொழியும் போது, நாட்டில் அனைத்து சட்டத்தரணிகளும், நீதிமன்ற நீதிபதிகளும் ஒன்றுதிரண்டு அரசை எதிர்பார்கள் என அரசு எதிர்பார்த்திருக்கவில்லை.