போர் ஆயுதங்களின் விஞ்ஞானியும் இந்தியா மேலாதிக்க வல்லரசு மனோபாவத்தின் தமிழ் நாட்டு அடியாளுமான அப்துல் கலாம் மரணச் சடங்கில் அரசியல் வாதிகள், பிரமுகர்கள் என்று நூற்றுக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்திய மக்கள் மீது நம்பிக்கையற்று ஆழிவு ஆயுதங்களை நம்பிய அப்துல் கலாம் நாளைய இந்திய சமூகத்தின் கதாநாயகனாக முன்னிறுத்தப்படும் அதே வேளை இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த யாகூப் மேனன் படுகொலை செய்யப்பட்டார்.
கணக்காளராக வேலைபார்த் யாகூப் மேனன் மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கள் பற்றிய தனக்குத் தெரிந்த தகவல்களை இந்திய உளவுத்துறையிடம் கூறிய குற்றத்திற்காகப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்திய இந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் ஆணைப்படி இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக மேனன் தனது 53 வது பிறந்ததினத்தில் தூக்கிலிடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். பி.ராமன் போன்ற இந்திய உளவுத்துறை அதிகாரிகளே மேனனைத் தூக்கிலிடுவது தவறானது எனச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
தனது வாழ் நாள் முழுவதும் இந்திய அதிகாரவர்க்கத்திற்கு சேவை செய்து மரணமடைந்த அப்துல் கலாமைக் கொண்டாடும் கூட்டங்கள் அப்துல் கலாம் சார்ந்த அதிகாரவர்க்கம் சாமானிய மனிதனைப் படுகொலை செய்தமையை அண்ணார்ந்து பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் யாக்கூப் மேனனின் படுகொலைக்கு எதிரான குரல்கள் எழுந்தன. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. கஷ்மீரில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.