Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மூவரையு கொலைசெய்ய மோடி அரசு திட்டம்:மோடிக்கு வாக்குக் கேட்ட அரசியல் தலைவர்கள் எங்கே?

பிrajivmurdersuspectழைப்புவாத வாக்குப் பொறுக்கிகளின் அரசியல் நாடகங்களை நம்பக் கோரி தமிழ்ப் பேசும் மக்களை ஏமாற்றுவது இன்றைய அரசியல் வியாபாரங்களுள் முக்கியமானது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த இப் பிழைப்புவாதிகள் ரஜீவ் கொலைச் சந்தேக நபர்களையும் பலி கொடுக்கும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளனர். இந்து பாசிஸ்ட் மோடி அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கும் ரஞ்சித்குமார் ரஜீவ் கொலைச் சந்தேக நபர்களைத் தூக்கிலடலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் அகதிகளை சிறை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ஜெயலலிதாவை இலங்கை அரசு தரக்குறைவாக எழுதியதாகப் போராட்டங்கள் நடைபெறும் சூழலில் ரஞ்சித்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகின் மனித் உரிமைச் சட்டங்களை அவமதித்து தமிழ் அகதிகளை விலங்குகள் போல நடத்தும் ஜெயலலிதாவிற்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான திட்டமிட்ட நாடகம் எதிர்வரும் நிகழ்வுகளைத் திசைதிருப்பவே நடைபெறுகிறது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இலங்கை அரசின் இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலுக்கு எந்தப் பாதிப்பும் அற்ற வகையில் தீர்மானங்களை நிறைவேற்றி மக்களைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் ஜெயலலிதா அரசு ரஜீவ் கொலைச் சந்தேக நபர்களைக் காப்பாற்றும் என்ற போலிப் பிரச்சாரம் இன்னும் மேற்கொள்ளப்படுகிறது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் தூக்கில் போட பரிந்துரை செய்து மனு தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி சட்ட அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த 3 பேரையும் தூக்கில் போடுவதை உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட சிறப்பு மனுவாக அந்த மனுவை தயாரித்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொலையில் நேரடித் தொடர்பற்றவர்களைத் தூக்கிலிட மோடி அரசு முடிவு செய்துள்ளது. தண்டனை வழங்கப்பட்டால் தேர்தலில் மோடிக்கு ஆதரவு கோரிப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் இனவாதப் பிழைப்பு வாதிகள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

Exit mobile version