ஜனவரி மாதம் 26ம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் முன்மொழியப்படவிருக்கும் அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக வட-கிழக்குத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் திருப்தியடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுயநிர்ணைய உரிமை அல்லது பிரிந்து செல்லும் உரிமை என்பது தேசிய இனமொன்றின் அடிப்படை ஜனநாயக உரிமை.
மூன்று தசாப்த இழப்பும் நெருப்பும் இலங்கை அரசின் எலும்புத் துண்டுகளுக்காகக் காத்திருப்பதில் முடிவடைந்திருக்கிறது.
இன்று இலங்கையில் நிலவும் தற்காலிக அமைதி, இராணுவ நடமாட்டமற்ற வெற்றிடம் என்பன நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கப் போவதில்லை என்பதை மக்கள் வரலாற்று அனுபவங்களிலிருந்து உணர்ந்திருக்கிறார்கள்.
சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையைக் கூட முன்வைக்க மறுக்கும் சுமந்திரனும் தமிழ்த் தலைமைகளும் ஒன்றிணைந்து இதுவரைகால தியாகங்களையும் இழப்புக்களையும் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.
காலனியத்திற்கு பிந்திய காலம் முழுவதுமான தேசிய இன ஒடுக்குமுறைக்கு அதிகாரப் பரவலாக்கல் தீர்வாகாது. சிங்கள பௌத்த சிந்தனைகொண்ட அதிகாரத்தைப் பரவலாக்குவது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக மற்றொரு அழிவிற்கே அழைத்துச்செல்லும்.