1
அனல் காற்று தில்லியில் வீசிய காலங்கள் பின்வந்த காலங்கள்.
இந்தியப் பிரிவினையின் பின்னான சில நாட்களில்– காந்தி டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் படத்தின் கதை நடக்கிறது. ஸலிம் மிர்ஸா முதியவயதினர். அவருக்கு மனைவி இரண்டு மகன்கள் ஒரு பெண். அவரும் மூத்த மகனும் காலணி உற்பத்தித் தொழிற்சாலை நடத்தி வருகிறார்கள். மூத்த மகனுக்கு மனைவியும் ஒரு ஆண்குழந்தையும் இருக்கிறார்கள்.
மிர்ஸாவின் இளைய மகள் அமீனா. இளைய மகன் சிக்கந்தர்.அந்த வீடு கூட்டுக் குடும்பம் வாழும் விடு. அந்த வீட்டின் ஒரு பகுதியில் மிர்ஸாவின் சகோதரரும் மனைவியும் அவர்களின் மகனான ஸலீமும் வாழ்கிறார்கள். வீட்டின் அருகாமையில்; மிர்ஸாவின் சகோதரியுன்; கணவரும் அவர்களது மகனான சம்சத்தும் வாழ்கிறார்கள்.
டெல்லியில் அவ்வப்போது சின்னச் சின்னக் காரணங்களை முகாந்தரமாக வைத்து அதை மதக்கலவரமாக மாற்ற முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. அமீனா ஸலீமைக் காதலிக்கிறாள். அவர்களுக்கிடையில் திருமணம் செய்து வைக்கிற எண்ணம் அந்த வீட்டிலுள்ள எல்லோருக்கும் இருக்கிறது. அதே வேளையில் அமீனாவின் மீது ஒரு தலைக் காதல் கொண்ட சம்சத் அவளைச் சதா துரத்தியபடியும் இருக்கிறான். சிக்கந்தர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். ஸலீமின் தகப்பன் ஒரு முஸ்லீம் லீக் அரசியல்வாதி. சம்சத்தின் தகப்பன் அரசியல் சந்தர்ப்பவாதி. பிழைப்பிற்கு ஏற்றாற்போல அவர் முஸ்லீம் லீக்கிலும் இருப்பார். காங்கிர்ஸ் கமிட்டி காரயதரிசியாகவும ;இருப்பார். காலணிகள் உற்பத்தியாளர்கள் நடத்தும் ஸ்டிரைக்கிலும் முன்னணியில் நிற்பார். இவர்களின்றி அஜ்மானி என்கிற காலணிகள் உற்பத்தி விநியோகஸ்தரும் மிர்ஸாவின் ந்ண்பரும் முக்கிய பாத்திரமாக இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து இடப் பெயர்வென்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியா நோக்கியும் முஸ்லீம்கள் பாகிஸ்தான் நோக்கியும் வந்தபடியும் போனபடியும் இருக்கிறார்கள். வருகிறவர்களும் போகிறவர்களும் பாஸ்போர்ட ;வைத்திருப்பதோடு தமது வருகையை பரஸ்பரம் அரசாங்கங்களுக்கு அறிவிக்க வேண்டியதும் கட்டாயமாகிறது.
மிர்ஸாவின் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராக பாகிஸ்தானுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறாக ஒரு உறவினரை வழியனுப்பும் போதுதான் படம் தொடங்குகிறது. முதலில் மிர்ஸாhவின் சகோதரன் குடும்பத்துடன் போகிறார். இரண்டாவதாக மிர்ஸாவின் தங்கை குடும்பத்துடன் போகிறார். மிர்ஸாவின் குடும்பம் மட்டுமே கடைசியில் மிஞ்சுகிறது. மிர்ஸாhவின் குடும்பத்தவர்க்கு ஏற்படும் துயரமே கதையாக– அவர்களது வாழ்வில் வீசும் வெப்பக் காற்றே கதையாக நீள்கிறது.
மிஸ்ராவுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வருகிறது. தொடர்ந்து தனது காலணித் தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்குச் செல்வதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தியைக் குறிப்பி;ட்ட காலத்தில் செய்யமுடிவதில்லை. குறிப்பிட்ட காலத்தில் உற்பத்திப் பொருளைத் தரமுடியாததால் அவருக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்காமல் போகிறது. தொழிற்சாலையை நடத்துவதற்கான மூலதனமும் இல்லாமல் வேலைச் சக்தியும் பற்றாக் குறையாகிற போது அவர் கணக்கு வைத்திருக்கிற வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கிறார்.
வங்கியில் கடன் வாங்கிய பெரும்பாலுமான இஸ்லாமியர்கள் வங்கிக்கு கடன்களைக் கட்டாமலேயே அறிவிக்காமல் பாகிஸ்தானுக்குப் போய்விடுவதால் இஸ்லாமியர்களுக்குக் கடன் கொடுப்பதில் பிரச்சினை இருக்கிறது என்கிறார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர். அங்கிருந்து தான் வழக்கமாக வட்டிக்கு வாங்கும் வட்டிக் கடைக்காரரிடம் வருகிறார் மிர்ஸா.
அங்கே ஏற்கனவே அவரது சகோதரியின் கணவர் வட்டிக்கு வாங்க அமர்ந்திருக்கிறார். வட்டிக்கடைக்காரர் தன்னிடம் வட்டிக்கு வாங்கிய இஸ்லாமியர் பெரும்பாலுமானோர் கடன்களைத் தராமல் பாகிஸ்தானுக்குப் போய்விட்டதால் தன்னால் வட்டிக்குத் தரமுடியாது என்கிறார். என்றாலும் மிர்ஸா மீது அன்பும் நம்பிக்கையும் கொண்ட மனிதர் அவர். ஆனால் மிர்ஸாவின் சகோதரர் சமீபத்தில் பாகிஸ்தானுக்குப் போன விவரத்தை வட்டிக்கடைக்காரரிடம் மிர்ஸாவின் சகோதரியின் கணவர் சொல்ல வட்டிக் கடைக்காரர் மிர்ஸாவுக்கு கடன் தர மறுத்துவிடுகிறார்.
மிர்ஸாவின் சகோதரர் சில நாட்களுக்கு முன்புதான் தனது மனைவி மகனுடன் பாகிஸ்தான் புறப்பட்டுப் போய்விட்டார். ஜின்னாவுக்குப் பிறகு இந்திய முஸ்லீம்களைக் காப்பாற்ற தான்தான் இருக்கிறேன் என முழங்கிக் கொண்டிருந்த ஒருவர்– பாகிஸ்தானில் இந்துக்களாலும் சீக்கியர்களாலும் கைவிடப்பட்ட கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் இருக்கிறது தாம் சென்றால் நன்றாகச் சம்பாதிக்கலாம் எனும் திட்டத்தில் தனது மகன் ஸலீமையும் கூட்டிக்கொண்டு– அமீனாவின் காதலன் ஸலீம்– பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறார்.
பாகிஸ்தானுக்குப் போனதும் ஒரு வேலை தேடிக்கொண்டு அமீனாவை அழைக்கிறேன் என்று வாக்குறதி தந்தவிடடுப் போன ஸலீம் நீண்ட நெடுநாட்களின் பின் ஒரு நள்ளிரவில் அமீனாவின் வீட்டுக் கதவைத தட்டுகிறான். அமீனா அப்போது அங்கேயில்லை.
அமீனாவின் குடும்பத்தினர் வேறு வீட்டுக்கு மாறிவிட்டார்கள். அந்த வீடு சகோதரரகள்; இருவருக்குமாய் இருந்தது. மி;ர்ஸாவின் தகப்பன் இற்க்கும் முன்பு காலணித் தொழிற்சாலையை மி;ர்ஸாவுக்கும் வீட்டை அவரது சகோதரருக்கம் தந்துவிட்டச்செல்கிறார்.
சகோதரர் பாகிஸ்தான் செல்லும்பொது அந்த வீட்டை ஒரு காபந்தாளரிடம் விட்டுச் செல்கிறார். அந்த வீட்டைச் சகோதரரிடம் கேட்டு தான் வைத்துக்கொள்ளலாம் என நினைத்திருக்கும் வேளையில் காபந்தாளர் அந்த வீட்டை; ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்து மிர்ஸாவுக்கு நீதிமன்ற நோட்டீஸ் விடுகிறார்.
மி;ர்ஸாவின் வீடு ஏலத்திற்குப் போகிறபோது அஜ்மானி அந்த வீட்டை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்;. எங்கெங்கு தேடியும் முஸ்லீமுக்கு யாரும் விடு தர மறுக்கிறார்கள். இறுதியில் மூன்று மாத வாடகை முன் பணம் கொடுத்து வீடு மாறுகின்றனர் மிர்ஸா குடும்பத்தினர். அந்த வீட்டை விட்டுப் போக மிர்ஸாவின் வயதுமுதிர்ந்த தாய்க்கு மனம் ஒப்பலில்லை. அவளுடைய கணவனோடு வாழ்ந்த வீடு அது. தனது குழந்தைகளின் பிள்ளைப்பேறு நிகழந்த வீடு அது. தனது பேரன் பேத்தியர்கள் ஓடித்திருந்த வீடு அது. தனது நினைவுகள் எங்கெங்கும் சுற்றித் திரிந்த வீடு அது. அந்த வீட்டிலிருந்து தான்போனால் கடைசித் தீர்ப்பு நாளில் தனது மரித்த கணவன் தன்னை மன்னிக்க மாட்டார் என்கிறாள் மூதாட்டி. வீட்டை விட்டு வராமல் விறகு அடுக்கும் அறையில் சென்ற ஒளிந்துகொள்ளும் மூதாட்டியை மிர்ஸா மன்றாடி அடுத்த வீpட்டுக்குக் கூட்டிப் போகிறார்.
பாகிஸ்தானிலிருந்து அமீனாவைப் பார்க்க அந்த வீட்டுக்கு வந்து சேர்கிறான் ஸலீம். ஆஜ்மானிய்ன உதவியுடன் மிர்ஸாவின் இன்றைய வீட்டுக்கு வருகிறான் ஸலீம். அமீனாவுக்கும் ஸலீமுக்கும் சில உறவினர்களுக்கு மட்டுமே அறிவித்த நிலையில் கல்யாண ஏற்பாடு செய்கிறார்கள்.
ிலையத்தில் தான் இந்தியா வந்திருப்பதை ஸலீம் அறிவிக்க வேண்டும் என வலியறுத்துகிறார் மிர்ஸா. இரவில் அமீனாவும் ஸலீமும் தனியே சந்திக்;கின்றனர்.
தனது தந்தை பாகிஸ்தான் அரசியல்வாதியொருவரின் மகளை திருமணம் செய்ய வலியுறுத்துவதாகவும் அதனின்று தப்பியே திருட்டுத்தனமாக– பாஸ்போர்ட்இல்லாமல்– தான் இந்தியாவுக்குள் வந்திருக்கிறேன் என்கிறான் ஸலீம்.
நள்ளிரவில் கதவு தட்டப்டுகிறது.போலீஸ் வந்திருக்கிறது. உரிய அனுமதியிலில்லாமல் நாட்டுக்குள் வந்த ஸலீமை நாடு கடத்தவேண்டும் என்பது அரச உத்தரவு. ஸலீம் அடுத்த நாள் நாடு கடத்தப்படுகிறான். அமீனாவின் கனவு நிரந்தரமாக நொறுங்கிப் போகிறது. மிர்ஸாவின் குடும்பத்தில் துயர் கவிகிறது. தொழிற்சாலையில் வேலை நடப்பதில் கஷ்டம். வங்கி கடன் தர மறுத்துவிட்டது. வட்டக்கடைக்காரன் கடன்தர மறுத்துவிட்டான். மகளின் திருமணக் கனவு உடைந்து விட்டது. இந்தியச் சமூகம் அவரை ஒதுக்குகிறது. இந்தச் சந்தரப்பத்தில் மிகப்பெரிய காலணி சப்ளைக்கான டென்டர் ஒன்று வருகிறது. டென்;டர்; கொடுப்பதற்கான உரிமையை உற்பத்தியாளரகள்; சங்கம்; தர மறுக்கிறது.
முன்னொருமுறை ஈத் பெருநாள் நோன்பையொட்டி தான் ஊர்வலத்தில் கலந்த கொள்ள இயலாதிருக்கிறது– தொழிற்சாலையை மூட இயலாமலிருக்கிறது என மி;ர்ஸா சொன்ன காரணத்தை முன்வைத்து அவருக்கு டென்டர் விண்ணப்பிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. இந்தச் சூழு;நிலையில்– தங்கையுடையதும் மனைவியுடையதும் நகைகளை அடகு வைத்து தொழில் நடத்த முனையும் மகனை மிர்ஸா தடுத்துவிடுகிறார்–
குறைந்த அளவில் செருப்புகளைத் தைத்து பணியாள் கூடையி;ல் சுமந்துவர உள்ளுர் மார்க்கெட்டுக்குப் போய் விற்பனை செய்ய முனைகிறார். அங்கு வரும் போலீஸ் அவரை பாக்ஸ்தான் அரசுக்கு ஒற்றராக வேலை செய்தார் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்கிறது.
நடந்தது இதுதான் : பாகிஸ்தான் சென்ற சகோதரர் தனது வீட்டை விலை பேசும் பொருட்டு வீட்டு பிளானை அனுப்பச் சொல்ல மி;ர்ஸா அதை அனுப்பியிருக்கிறார். கோர்ட்டில் மி;ர்ஸா குற்றமற்றவர் என்பது நிருபிக்கப்படுகிறது. மி;ர்ஸா தனது தொழிற்சாலைக்குச்; சென்று கொண்டிருக்கும் சமயமொன்றில் அவரது குதிரைவண்டி வழியில் நின்ற ஒரு கைவண்டியுடன் எதேச்சையாக மோதிவிட அது மதக்கலவரமாக அவர் கடுமையாகத் தாக்கப்படுகிறார்.அஜ்மானி வந்திருந்து அவரைப்பார்த்து ஆறுதல் சொல்கிறார். தமது எல்லா முயற்சிகளும் தடைப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வன்முறைக்குள்ளாக்கபட்டு இருக்கும் சூழலில் மேற்கொண்டும ;இந்த நாட்டில் இருப்பதில்லையென அவரது மூத்தமகனும் பாகிஸ்தான் புறப்பட்டுப் போகிறான்.
அமீனாவைத் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் சம்சத்தின் அசட்டுத்தனமான காதல் கவிதைகளிலும் அவனது வெளிப்படையான மனதிலும் ஆறதல்; காணும் அமீனா அவன் மீது ஈடுபாடு கொள்கிறாள். சம்சத்தும் அவளும்; தான்சேனும் உருதுக் கவிகளும் சுற்றித்திரிந்த இடங்களில் அலைந்த திரிகிறார்கள்.
தாஜ்மஹாலின் சுற்றுப்புறங்களிலும் நதியின் படகிலும் புல் வெளிகளிலும் அவர்களது காதல் வளர்கிறது. ஒரு முறை சந்திக்கும்போது தனது தந்தை செய்த தவறொன்றினால் தான் ஒன்று போலீசுக்குப் போக வேண்டியிருக்கிறது அல்லது பாகிஸ்தானுக்கு ஓடிப்போகவேண்டியிருக்கிறது என்கிறான் சம்சத்;.
நீ ஏற்கனவே ஏமாற்ப்பட்டிருக்கிறாய் ஸலீமைப் போல நான் உன்னைக் கைவிடமாட்டேன் என்கிறான் அவன். அவர்களுக்கிடையில் கலவி நேர்கிறது. அமீனாவின் முகத்தைக் கையில் ஏந்த விளைகையில்; ரெயில் புறப்பட தந்தையின் கூப்பிடு குரலுக்கு நகர்ந்து அமீனாவை விட்டுப் பிரிகிறான் சம்சத்.
அமீனா காத்திருக்கிறாள். சம்சத்தின் தாய் இந்தியாவுக்கு வருகிறாள். அமீனா திருமணம் சம்பந்தமாகத்தான் வந்திருப்பதாக அனைவரும் மகிழ்கிறார்கள். அமீனாவை ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று வண்ண வண்ணமாக அமீனாவுக்குப் பிடித்தமான புடவைகளை எடுக்கிறாள மாமி.;.
வீடு வந்து பேசிக்கொண்டிருக்;கும் போது லாகூரில் எல்லாம் கிடைக்கும. இம்மாதிரிப் புடவைகள் மட்டும் கிடைக்காது என்பதால் தான் இங்கே வந்தேன்– அமீனாவின் நிறமும் தனது பாகிஸ்தான் மருமகளின் நிறமும் ஒன்றுதான் ஆகவேதான்; அமீனாவை அழைத்துச் சென்று ஜவுளி எடுத்தேன் என்கிறாள் மாமி.
அமீனாவின தாயின் மனம் உடைந்துபோகிறது. மிர்ஸா அவரது சகோதரியோடு மனைவியைச் சண்டை போடவேண்டாம் என்கிறார். பாகிஸ்தானில் ஒரு பணக்கார மருமகள் கிடைத்திருக்காவிட்டால்; சமசத் அவளைத்தான் மணந்துகொள்வான் என்கிற சகோதரி அமீனாவை ஏன் ஸலீம் விட்டுப் போனான் எனப் பேசிக்காட்டி கருணையின்றி ஏசிக்காட்டுகிறாள்.
அமீனா அழவில்லை. தனது அறைக்கப் போகிறாள். வண்ண வண்ண உடைகளை தனக்கு போர்த்துக் கொண்டு கணணாடியில் பார்த்து சிரிக்கிறாள். அம்மா கொடுத்த நெற்றிப் பொட்டுடன் கூடிய திருமண உடையொன்றை அணிந்து தலைப்பைத் தலைக்கு மூடி அழகு பார்க்கிறாள். தீர்மானித்தவளாக படுக்கையில் சாய்ந்தபடி சவர பிளேடினால் தனது மணிக்கட்டை வெட்டிக்கொண்டு படுக்கையில் சாய்கிறாள். இரத்தம் படுக்கையை நனைக்கிறது.
அதிகாலையில் மகள் இன்னும் சாப்பிட வரவில்லiயா எனக் கேட்டுக் கொண்டு தந்தை அமீனாவின் அறை;க்கு வருகிறார். கதவு திறக்க மகளின் மரணித்த உடலைப் பார்த்து அழமுடியாது உறைந்து நிற்கிறார். எல்லாம் முடிந்து போயிற்று. தொழில் முடிந்த போயிற்று. வீடு போயிற்று. கடன் தருவாரில்லை. தனது தாயகமே தன்னை ஒற்றன் என்கிறது. தன்னை வன்முறைக்கும் தனது மக்களே ஆட்படுத்துகிறார்கள். உறவுகள் போனது. மகன் போனான். பெற்ற மகளைச் சாகக் கொடுத்தாயிற்று. அவளைப் புதைத்தும் ஆயிற்று. அவர் முழதும் நம்பிக்கையை இழந்துவிட்டார்.
இந்த நாட்டில் வாழ முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு முற்றிலும் போயிற்று. மகன் சிக்கந்தர் பாகிஸ்தானுக்கு வரமாட்டேன் என்கிறான். தனது வாழ்வு தனது போராட்டம் இங்கேதான் என்கிறான். இங்கும் எங்கும் வாழவு போராட்டம்தான் என்கிறான். தனது டீக்கடை நண்பர்களை– தங்களுக்கு ஆலமரம் போல் நிழல் தரும் பணம் தரும் டீக்கடைக்காரரரை விட்டு வர அவனுக்கு மனமில்லை.
அவரது மாணவ நண்பர்கள் தாராளவாதிகள் உரிமை வேட்கை கொண்டவர்கள். இடதுசாரிகள். போராட நினைப்பவர்கள். ஆனால் தந்தையின் வார்ததையை அவன் தட்டமுடியவில்லi. அவரது துயரம் அவனைத் தடுக்கிறது. வீட்டைப் பூட்டிக்கொண்டு வேண்டிய உடமைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கிளம்புகிறார்கள் குதிரை வண்டி இடையில் வரும் ஊர்வலமொன்றின் ஜனநெரிசலில் மேலே போகமுடியாது நிற்கிறது. சிவப்புப் பேணர்களும் செங்கொடிகளும் அசைய ஊர்வலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைவருக்குமான வேலை கேட்டு உரிமை கோரிச் செல்லும் ஊர்வலம் அது.
மாணவரும் தொழிலாளரும் முதிர்ந்தவரும் இளையவரும் இஸ்லாமியரும் இந்துக்களும் கலந்து போகும் ஊர்வலம் அது. ஊர்வலத்தில் செல்லும் சிக்கந்தரின் தோழனொருவன் நீயும் புறப்பட்டுவிட்டாயா எனக் கேட்டபடி தொடர்ந்து ஊர்வலத்தில் போகிறான். சுpக்கந்தரின் நண்பர்கள் ஒவ்வொருவராக அந்த ஊர்வலத்தில் போகிறார்கள். சிக்கந்தரும் போகத் துடித்தபடி தந்தையைப் பார்க்கிறான்.
இப்போது நான் உன்னைத் தடுக்கவிலலை மகனே. நீ போகலாம் என்கிறார் மிர்ஸா. தனது மகனின் இடம் இதுதான் என்பது மட்டுமல்ல தனது இடமும் இதுதான் என்று புரிந்து கொண்டவர் போல குதிரை வண்டிக்காரரிட்ம் மனைவியை மறுபடி வீட்டில் கொண்டவிடச் சொல்கிறார.; மனைவி அரே அல்லா என்கிறாள்.
மனைவியிடம் சாவியைக் கையளிக்கும் மி;ர்ஸா தானும் ஊர்வலத்தில் நகரந்து செல்லத் தொடங்குகிறார். ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. அங்கேயும் இங்யேயும் எங்கேயும் வாழ்வு போராட்டம்தான் புது யுக நம்பிக்கை கொண்டுபோவோம் என்கிற பாடல் வரிகள் ஒலித்துக ;கொண்டிருக்க சிவப்புப் பதாகைகளை அசைத்தபடி ஊர்வலம் போய்க் கொண்டிருக்கிறது.
இ;ந்தப்படத்தின் திரைக்கதை பாடல்கள் எழுதிய கைபி ஆஸ்மி புகழ்வாய்ந்த உருதுக் கவிஞர். இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியில் அந்நாட்களில் செல்பட்டவர். இன்றைய புகழ்வாய்ந்த நடிகை ஷப்னா ஆஷ்மி இவரது மகள்.
கரம்ஹவா படத்தின் இறுதியில் தெறிக்கும் நம்பிக்கை அன்று ஒரு உலகக் கனவாக வளர்ச்சியுற்றிருந்த மார்க்சிய நம்பிக்கைதான். படத்தின் இயக்குனர் எம்.எஸ்.சத்யூவும் பிரதான நடிகர் மி;ர்ஸாவாக வரும் பால்ராஜ் ஸஹானியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சார அமைப்பாக இருந்த இந்திய மக்கள் நாடக மன்றத்தில் இயங்கி வந்தவர்கள். பால்ராஜ் ஸஹாணியின் மிர்ஸா பாத்திரத்தை அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அமீனாவாக நடிக்கும் ஜலால் ஆகாவின் தற்கொலைக்காட்சியும் மிர்ஸாவின் தாயின் மரணமும் நினைக்கந்தோறும் கண்ணீpல் நீர் வரவழைக்கும் மகத்தான வரலாற்றுச் சோகமாகும்.
2.
சொந்த நாட்டையும் வீட்டையும் ஊரையும் தாம் அலைந்து திரிந்த தெருக்களையும் எவரும் மறந்து விடுவதில்லை. அமெரிக்கப் பிரஜையாகிவிட்டாலும் அயர்லாந்துக்காரனுக்கு தாய்வீடு அவனுடைய பெல்பாஸ்ட் வீடுதான். ஐரோப்பாவில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் அமர்த்யா சென்னுக்கு தன்னுடைய இந்திய பாஸ்போர்டடை விடமுடியவில்லை. நினைவுகள் கடந்த காலத்தில்தான் வாழ்கிறது. கடந்த காலம்தான் மனிதனோடு இறுதி வரை தொடர்பவையாக இருக்கிறது. மம்மோவுக்கு தனது கணவன் இருந்தவரையிலும் பாகிஸ்தானில் வாழ்வதற்கான நியாயங்கள் இருந்தது. அவளது கணவன் இருந்தபோதே அவனது உறவினர்கள் மம்மோவுக்கு கசப்பான அனுபவத்தையே தந்தார்கள். அவளது வீடு இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் பானிபட்டில்தான் இருந்தது. அவளது மனம் பம்பாயில் வாழும்; அவளது சகோதரியோடுதான் இருந்தது.
மம்மோவின் கணவன் இறந்த பின்னால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் விசா எடுத்துக் கொண்டு பம்பாய் வந்து அவளது சகோதரியோடும் அவளது பேரனோடும் தங்கிவிட்டுச் செல்கிறாள் அவள். ஓவ்வொருமுறை வரும்போதும் தனது சகோதரியோடும் அவளது அன்பான பேரனோடும் நிர்ந்தரமாகத் தங்கி விடுவதுதான் அவளது ஆசை. ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாக அவளுக்குத் தங்க அனுமதியில்லை. இன்னும் வலியுறுத்தினால் மறுபடி ஒரு மாதம் இருக்கலாம். ஆனால் அவள் மறுபடி தனது கசப்பான நகருக்கு–லாகூருக்கு– திரும்பிச் சென்றுவிடத்தான் வேண்டும்.
மம்மோ கதையில் பிரதானமாக மூன்று பாத்திரங்கள். மம்மோ. மம்மோ பாத்திரத்தை ஏற்றிருப்பவர் ஆராதனா படத்தில் மகனான ராஜேஷ் கன்னாவைக் காதலிக்கும் அந்தக் குறும்புக்காரப் பெண்ணாக வந்த பரீதா ஜலால். ஆனால் முதமையில்தான் என்ன அழுகு அவர்– நம் மனதைத் தனது பண்பட்ட நடிப்பினால் அள்ளிக் கொண்டு போகிறார் பரீதா. அவளது சகோதரி. சகோதரியின் பேரன் ரியாஸ். ரியாஸாக வரும் சிறுவனும் அழகாக நடித்திருக்கிறான்.
ரியாஸ் தனது சின்னப் பாட்டியான மம்மோவைப் பற்றி தனது பாட்டியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான். அவனது பிரியமான பாட்டி–அவனதுஅன்பான முதியமனுஷி– மம்மோ பாட்டிதான். அவனிடம் மம்மோவைப் பற்றிய அழகான நினைவுகள் இருக்கிறது. அன்று வீட்டடில் தனது பாட்டியிடம் மம்மோவைப்பற்றி; –மம்மோவுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றி– இருபது வருடங்களுக்கு முன்னால் மம்மோ இங்கு வந்த போது போலீஸ் அவளைப் பலவந்தமாக நாடு கடத்தியதின் பின் அவளுக்கு என்ன ஆனது என்பது பற்றி– பாட்டியிடம் கேட்கிறான்.
தனக்கு அவள் நிறையக் கடிதம் எழுதுவதாகவும்– இங்கேயே வந்து இருந்துவிட நிறையக் கடிதங்கள் எழுதினாள் என்றும் தான் பதில் கடிதம் போடாததால் இப்போது கடிதங்கள் வருவதேயில்லை என்கிறாள் பாட்டி. அவளை இங்N;க அழைக்க நினைத்தபோது பாகிஸ்தானுக்கு நிறையக் கடிதங்கள் எழதிப்பார்த்தும்– அவளது கணவனின் உறவினர்களோடு ராவல்பிண்டிக்கும் லாகூருக்கும் எழுதியும் கூட விவரம் தெரியவில்லை– அவளது இருப்பிடம் தெரியவில்லை என்கிறாள் பாட்டி. அப்போது கதவு தட்டப்படும் சத்தம கேட்கிறது. ரியாத் சென்று கதவைத் திறக்கிறான். மம்மோ நிற்கிறாள். அது 1970 களின் ஆரம்ப ஆண்டுகள். என்னை மறந்து விட்டாயா குழந்தையே எனக் கேட்டபடி சிறுவன் ரியாத்தை அனைத்தபடி உள்ளே வருகிறாள் மம்மோ. சகோதரி ஓடி வருகிறாள். அவளது மூன்று மாத விசா வாழ்வு அன்றிலிருந்து தொடங்குகிறது. அவள் வந்தவுடன் வீடு முழுக்கவும் நிறைந்து போகிறாள்.
ரியாத்தின்; படக்கையறையில் அவளுக்குப் படுக்கை. ரியாத்துக்கு தனது இருப்பிடம் உடமைகள் போன்றவற்றை மம்மோவோடு பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. ரியாத்துக்கு பாட்டியோடு எப்போதும் பிரச்சினை. பாட்டி சினிமாவுக்குப் போக விடுவதல்லை. அவன் வயசுப் பையன்களோடு சதா அவன் போனில் பேசிக் கொணடிருப்பது பிடிப்பதில்லை. அவன் மீதான கண்டிப்பு அவன் மீதான அன்பிலிருந்தான ஆக்கிரமிப்பிலிருந்து வருவது என்பது சிறுவனுக்கு பல சமயங்களில் புரிவதி;லை.
அந்த வயதுக்கேயான குறும்புகளோடு அவன் திரிகிறான். செயற்கை மீசை தீட்டிக் கொண்டு அவனும் நண்பனும் சைக்கோ படத்திற்குப் போகிறார்கள். ஹிட்ச்காக்கையும் சார்லி சாப்ளினையும் கலீல் கிப்;ரானையும் அவனுக்குப் பிடிக்கிறது. காமக் கிளர்ச்சி சஞ்சிகையை அவனது அறையிலிருந்து கண்டுபிடிக்கும் பாட்டி அவனை அடித்துத் துவைத்து விடுகிறாள். ரியாசுக்குச் சீக்கிரமே பதினைந்து வயது வரப்போகிறது. ரியாஸ் மம்மோவின் முகத்திரை கொண்ட மேலங்கியை உபயோகித்து வயது வந்தோருக்கான படம் பார்க்கிறான். தனது அறையில் பாட்டிக்குத் தெரியாமல் சிகரெட் பிடிக்கிறான். மம்மோ இவையெல்லாவற்றிலும்; ரியாசுக்கு உதவுகிறாள். மம்மோவும் அவனோடு சேர்ந்து புகை பிடிக்கிறாள். மம்மோ பல்வேறு வகைகளில் இந்த இளம் பருவக் கோளாறு கொண்ட பையனைப் புரிந்து கொள்கிறாள்.
மம்மோவுக்கும் ரியாசுக்கும் இடையில் பாசம் வளர்கிறது. ரியாசின் தாய் தந்தையர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டதாகப் பாட்டி அவனிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் நிஜத்தில் அவனது தந்தை விபத்தில் மனைவி இறந்த சில நாட்களிலேயே இரண்டாம் தாரம் கட்டிக் கொண்டு மகனை முற்றிலும் கைவிட்டு விடுகிறான். ரியாசுக்கு தன் தந்தை உயிரோடு இருப்பது தெரியவரும்போது பாட்டியோடு சண்டை போடுகிறான். பாட்டியோடு கோபித்துக் கொண்டு அவளோடு பத்து நாட்கள் பேசாமல் பள்ளிக் கூடமும் போகாது இருந்து விடுகிறான்.
தனது தந்தைக்குக் கடிதம் எழுதுகிறான் ரியாஸ.; தந்தையிடமிருந்து பதில் கடிதமும் ஆயிரம் ருபாய்க்கு காசோலையும் வருகிறது. கடிதத்தில் ரியாஸ் இனிமேல் தன்னோடு தொடர்பு கொள்ளக்கூடாது தான் அதை விரும்பவில்லை என தந்தை எழுதியிருக்கிறார். அழுது வெடிக்கும் ரியாஸ் ஓடிச் சென்று பாட்டியைக் கட்டிக் கொள்கிறான்.
மம்மோ பாட்டிக்கும் ரியாசுக்கும் இடையில் பாலமாக இருக்கிறாள். வீட்டுக்கு தினமும் முகத்தில் காயங்களுடன் வரும் வேலைக்காரியின் புருஷனைத் தேடிச்சென்று மதுவிடுதியில் அவனை நாலு சாத்துச் சாத்தி வேலைக்காரியைக் கணவனின் வன்முறையினின்று காக்கிறாள் மம்மோ. மம்மோ இப்போதெல்லாம் அக்கம்பக்கத்துப் பெண்குழந்தைகளுக்கு குரான் சொல்லித்தருகிறாள்.
பாட்டி எவ்வளவு மன்றாடியுயும் குரான் படிக்காத ரியாஸ் மம்மோ சொல் கேட்டு குரான் கற்றுக் கொள்கிறான். மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது. மறுபடி மூன்று வாரங்கள் டாக்டர் ஸர்ட்டிபிகேட் பெற்று தங்க அனுமதி பெறுகிறாள். அந்த மூன்று வாரங்கள் முடிகிறபோது மறுபடி தங்குவதற்கான காரணம் சொல்ல முடியவில்லை. திரும்பிப் போயே ஆக வேண்டும்.இடையில் ரியாசு பதினைந்தாவது பிறந்த நாள் வருகிறது. மம்மோவுக்குச் சொல்லாமல் அவனது நணபர்களை வீட்டுக்கு வரச்சொல்லி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரகசியமாக எற்பாடுசெய்கிறாள் மம்மோ. நண்பர்கள் வருகிறார்கள். கொண்டாட்டம் முடிகிறது. ரியாஸ்; கொண்டாட்டத்தில் பங்கு பெறவில்லை. அவனுக்கு மம்மோவின் அத்து மீறலின் மீது தீராத கோபம். யாரைக் கேட்டுக்கொண்டு எல்லாம் செய்தாள்? அவனுடைய நண்பர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் காரும் பங்களாவும் வசதியுமாக இருப்பவர்கள். ஆகவே அவன் யாரையும் தன் வீட்டுக்குக் கூப்பிடுவதில்லை.
நீ எனது அறையை எனது படுக்கையை எடுத்துக் கொண்டாய். எல்லாவற்றிலும் தலையிடுகிறாய்– யார் நீ? இந்த வீட்டில் நீயொருத்தியில்லை– நீயொரு விருந்தாளிதான்–உனக்கு இந்த உரிமைகள் இல்லை என்கிறான் ரியாஸ். மம்மோ அழுகையுடன் சகோதரியபை;பார்க்கிறாள். நீ எப்போதுமே அப்படித்தான் எல்லாவற்றையும் உன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வாய்–ஆக்கிரமிப்பு செய்வாய் என்கிறாள் சகோதரி. மம்மோ ஆற்றாது அழுதபடி வீட்டை விட்டுப் போய்விடுகிறாள். ரியாசும் பாட்டியும் மம்மோவை தர்காக்களில் தேடித்திரிகிறார்கள். இறுதியில் கவாலிப்பாடகர்களின் முன் அமர்ந்திருக்கும் கூட்டத்தினிடையில் துயருடன் அமர்ந்திருக்கும் மம்மோவைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிடுகிறான் ரியாஸ் வீட்டுக்கு போவோம் என்கிறான் அவன். பேரனோடு மம்மோ வீடு வருகிறாள்.
அதற்குப் பின்னால் பல்வேறு சந்தரப்பங்களில் அவளது சகோதரி பேசுகிற எந்தக் கடும் வார்த்தைகளும் மம்மோவுக்கு ஒரு பொருட்டாவதில்லை. நாட்கள் பறக்கின்றன. முன்பொரு முறை டாக்டர் சர்ட்டிபிகேட் பெற்றுத்தந்த தமிழனான ராஜூ ஏஜென்டைத் தேடி தாராவி போகிறான் ரியாஸ். ஐந்தாயிரம் ருபாய் கொண்ட வந்தால் அதிகாரிக்குக் கொடுத்து நிரந்தரமாகத் தங்க எற்பாடு செய்யலாம் என்கிறான் ராஜூ. ஓட்டலொன்றில் சென்று மம்மோவும் ரியாஸூம் பணமும் மோதிரமும் கொடுக்கிறார்கள். பேரனுக்கு புததாடைகள் தைத்துத் தருகிறாள் மம்மோ. அன்று பக்கத்தவீட்டுப் பெண்– மம்மோவிடம் குரான் படிக்கும் சிறுமியொருத்தியின் தாய்–மம்மோவை அன்றிரவு விருந்துக்கு அழைக்கிறாள். அன்று அனைவரும் விருந்துக்குப் போக இருக்கிறார்கள். ரியாஸ் வெளியல் போயிருக்கிறான். அப்போது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வேலைக்காரி சென்று கதவைத்திறக்கிறாள்.
கதவுக்கு வெளியே இரண்டு ஆண் போலீஸ்காரர்களும் இரண்டு பெண் போலீசம் நிற்கிறார்கள்.விசா காலம் கடந்தும் சட்டபூறவமற்ற முறையில் தங்கியிருக்கும் மம்மோவை நாடு கடத்தும் உத்தரவுடன் அவர்கள் வந்திருக்கிறார்கள். மாற்றுத்துணி எடுத்துக் கொள்ளக்கூட அவகாசம் தராமல் ;போலீஸ் மம்மோவை இழுத்துக் கொண்டு போகிறது. மம்மோ புலம்பியபடி போக சகோதரி அழுதபடி வாகனத்தின் பின் ஓடுகிறாள். ரியாஸ் வீட்டுக்கு வருகிறான். மம்மோவைக் காணவில்லை. எங்கேயென பாட்டியைக் கேட்கிறான். பாட்டி போலீஸ் வந்து இழுத்துப் போய் விட்டது என்கிறாள். ரியாஸ் விசா அலுவலகத்துக்கு ஓடுகிறான். அங்கே பழைய அதிகாரி–காசு வாங்கியவன் இல்லை–மம்மோ பம்பாய் ரெயில் நிலையத்திற்கு நாடு கடத்த அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக அதிகாரி சொல்கிறான்.
ரியாஸ் ரெயில் நிலையத்திற்கு ஓடுகிறான்.மம்மோவை ரெயிலில் மறுக்க மறுக்க ஏற்றிவிட்டு ஏன் அழுகிறாய் உன் நாட்டுக்குத்தானே போகிறாய் என்கிறாள் பெண் போலீஸ். இதுதான் என் நாடு என்கிறாள் மம்மோ. இதுஎன்ன துயரமான வேலை என்கிறான் போலீஸகாரன். ரெயில் புறபபட்டுவிட்டது. ஓடிவரும் ரியாஸ் ரெயில் பெட்டிக்குள் இருக்கும் மம்மோவின் கைகளை ஜன்னலின் ஊடே பிடித்தபடி மம்மோ மம்மோ என்கிறான்.
கதவு தட்டப்படுகிறது. ரியாஸ் திறக்கிறான். மம்மோ நிற்கிறாள். இருபதாண்டுகளின் பின் மறுபடியும் மம்மோ. முதுமை அதிக நரையை தள்ளாட்டத்தைக் கொண்டுவந்துவிட்டது. சகோதரிகள் அழுதபடி கட்டிக் கொள்கிறார்கள். ரியாஸ் கல்யாணம் செய்து கொண்டானா என்கிறாள் மம்மோ– தனக்கு இளமையிருந்தால் தானே ரியாஸைக் கட்டிக் கொள்வேன் என்கிறாள். ரியாஸ் எத்தனை புத்தகங்கள் எழுதியிக்கிறான் எனக் கேட்கிறாள். எப்போது திரும்பிபப் போகவேண்டும் எனகிறாள் சகோதரி. இனி என்றும் இல்லை என்கிறாள் மம்மோ. பாகிஸ்தானிலிருந்து தான் கொண்டுவந்த ஒரு ஸர்ட்டிபிகேட்டை மம்மோ ரியாஸிடம் தருகிறாள். அது மரணஸர்ட்டிபிகேட். மம்மோ – லாகூரிருக்கும் எழுபத்தியைந்து வயதான மம்;மோ–அதன் படி இறந்தவிட்டாள். பிரதிகள் இந்திய பாகிஸ்தான் தூதரகத்துக்கும் பம்பாயிலிருக்கும் விசா அலவலகத்திற்கும் அனுபப்பட்டிருக்கிறது.
இறந்தவளை இனி பாகிஸ்தானிய தூதரகமோ இந்திய விசா அலுவலகம் சார்ந்தவர்களோ தேடவும் முடியாது– புதைகுழியிலிருந்து எழுப்பவும் முடியாது. மம்மோ தனது சகோதரியையும் அன்புப் பேரனையும் முகத்தடன் முகம் சேர்த்து கட்டிக்கொண்டு சிரிக்கிறாள்
இடப்பெயர்வ என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மனிதர்கள் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்கிறார்கள். பொருளியல் காரணங்களுககாக உள்நாட்டுப் போர்க் காரணங்களுக்காக திருமணம் காரணமாப புதிய சூழலை எதிர்கொள்ள என இடப் பெயர்வு நடந்தபடிதான் இருக்கிறது. ஆனால் தேர்வினடிப்படையிலான இடப் பெயர்வுக்கும் பலவந்தமாக நேரும் இடப் பெயர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆயினும் இட்ப்பெயர்வு அன்னியமான மனிதர்களையும் மிகுந்த பதட்டமும் மன உளைச்சலும் கொண்ட மனிதர்களையும் தான் உருவாக்குகிறது. இன்னும் இடப்பெயர்வு இருப்பிடம் உயிர் வாழ்வு உறவு சம்பந்தமான நிறைய உத்தரவாதமற்ற நிரந்தரமற்ற தன்மைகளையும் கொண்டிருக்கிறது. இன்னும் இடப்பெயர்வில் முதுமை என்பது மிக மிகக் கொடியது.
விருப்பமற்று அழைத்துச் செல்லப்பட்டவள் மம்மோ. உறவினர்கள் அவளை அன்னியளாகத்தான் நடத்தினார்கள். கணவனும் இறந்துவிட்டபிறகு தீராத துயரம். இரண்ட மண் வளரந்த மண் அன்பு பாராட்டும் உறவினர்கள் எல்லோரும் அக்கரையில்– அங்குதான் அவளது நினைவுகள் இருக்கிறது. இனியான வாழ்வும் அங்குதான் இருக்கிறது.
எல்லைகள் என்ன செய்துவிட முடியும?;. இருந்தென்ன இறந்தென்ன எனும் நிலை வரும்போது அரசுகளுக்காக இறப்பது அவளுக்குப் பொருட்டில்லை. ஒவ்வொரு பிரிவின் போதும் மனிதர்கள் மீது அரசியல் முடிவுகள் சுமத்தப்படுகிறது. எவரும் மனிதர்களின் விருப்பைக் கேட்பத்pல்லை. அவர்களின் அபிப்பிராயம் கூட கேட்கப்படுவதில்லை. கோடானுகோடி மனிதர்கள் இப்படித்தான் இடம் பெயர்க்கப்படுகிறார்கள்.
முதுமை ஒரு சுமையாக அறியப்படுகிற எமது சமூகங்களில் நிராகரிக்கப்பட்ட உணர்வுடன் வாழ்வதென்பது கொடுமை. அரசியல் மனிதர்களை அவர்களது விருப்பங்களை ஏமாற்றுகிறது. மனிதர்கள் திரும்ப அரசியல் அமைப்புகனையும் குடியேற்றச் சட்டங்களையும் வழக்கு மன்றங்களையும் ஏமாற்றத்தான் வேண்டியிருக்கிறது.
மம்மோ இழுத்துச் செல்லப்படும்போது துயருரம் நமது மனம் அவள் நிரந்தரமாகத் திரும்பி வரும்போது குதூகலிக்கிறது. இங்கே அறவியல்களும் சட்டங்களும அது சொல்லும் ஒழுக்கங்களும் அர்த்தமற்றுப் போகிறது. இவைகள் பற்றிக் கவலைப்படாத மனிதர்களே புது வகை மனித நாகரிகத்தை உருவாக்குவர். மம்மோ அவர்கள் சமூகத்தின் முதல் மனுஷி. மிக நியாயமாக ஒரு கேள்வி வருகிறது. இந்த மானுட அவலத்திலும்;; அடிப்படை மனித உறவுகளைத் தேடிய அவாவினிடையிலும் இந்து முஸ்லீம் அரசியலுக்கும் தேசப் பிரிவினைக்கும் என்னதான் அர்த்தம் இருக்கமுடியும? புதில் மிகத் தெளிவாக மம்மோவின் நடவடிக்கையில் இருக்கிறது.
3
டிரெயின் டு பாகிஸ்தான் பற்றிய இன்றைய வாசிப்பென்பது பாப்ரி மஜீத் இடிப்புக்குப் பின்னான அரசியல் வாசிப்பாகவே இருக்க முடியும்.தகவல் தொழில்நுட்ப ஊடகத்தில் வெளிநாட்டில் வாழம் படித்த இந்தியர்களில் பெரும்பாலுமானோர் வழி இஸ்லாம் விரோதம் என்பதும் இந்துத்துவ வழிபாடென்பதும் வெளிப்படையாக ஆகிவருகிறது. ஆயிரமாண்டுகளாக அடிமையாக்கப்பட்டு இஸ்லாமியப் படையெடுப்பால் ஆங்கிலேயப் படையெடுப்பால் அடக்கப்பட்டோம் என்கிற மாதிரியிலான காலனியாதிக்க எதிர்ப்புப் போல் தோற்றம் தரும்
டிரெயின் டு பாகிஸ்தான் ஹே ராம் எர்த் போன்ற மூன்று படங்களுமே பாப்ரி மஜீத் உடைப்புக்குப்பின் வந்த படங்கள் என்பதை நாம் ஞாபகம் கொள்வொமாயின் குஷ்வந்த்சிங்கின் டிரெயின் டு பாகிஸ்தான் படம் பெறும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.
ஆயிரத்தித் தொளாயிர்த்து நாற்பத்தியேழாம் ஆண்டின் கோடைக்காலம். பஞ்சாப் மாநிலத்தின் மனோ மஜ்ரா கிராமம். இரண்டாகப்பிளக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையோரம் இந்திய பஞ்சாபைச் சேர்ந்த கிராமம் மனோ மஜ்ரா.
முதல் காட்சியிலேயே முகம் கறுப்புத்துணியால் மூடியிருக்க கொள்ளையொனருவன் தூக்கிலிடப்படுகிறான். வெள்ளை அதிகாரிகள் அருகிருக்கிறார்கள். இது நிகழ்வது கடந்த காலம். அப்பா எனக் கதறியபடி சிறுவனொருவன் மதிலிலிருந்து குதித்து ஓடிப் போகிறான். அவன் தூக்கிலிடப்பட்ட கொள்ளையனின் மகன். பஞ்சாபில் அப்போது கொள்ளையர்களின் ராஜ்ஜியம். சுதந்திர இந்தியாவில் வளரந்துவிட்ட திருடனாகிறான் மகன். ஜக்கா அவனது பெயர். சீக்கிய மதத்தவன். தனது தந்தையின் தலைமையிடத்துக்காக மல்லி என்பவனோடு சதா போராடியபடி அவன் வாழ்வு கழிகிறது.
அவனுக்கும் லட்சியங்கள் உண்டு. பொறுப்புக்கள் உண்டு. தன் சொந்தக் கிராமத்து மக்களிடம் அவன் ஒரு போதும் கொள்ளையடிப்பதில்லை. கிராமத்தின் விழியிழந்த முஸ்லீம் பெரியவர் ஒருவரின் மகளான நூரான் அவனது காதலி. அவனைப் பொறுத்து அவன் முஸ்லீமும் அல்ல சீக்கியனும் அல்ல. வானத்தில் அலைந்தபடியிருக்கும் நட்சத்திரம் போன்ற சுதந்திர மனிதன் அவன்.
இக் கிராமத்துக்குப் புதிதாக அப்போதைய டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் ஒருவர் வந்து சேர்கிறார். மாஜிஸ்திரேட்டாக வருகிறவர் மோகன் ஆப்தே. மனசில் நிற்கும் முதிர்ச்சி வாய்ந்த நடிப்பு அது. அன்றைய வழக்கப்படி கிராமத்ததை நிர்வாகம் செய்வதும் அது தவிர்ந்த நேரங்களில் கஜல் பாடல்களைக் கேட்டுக் கொண்டு குடித்துக் கொண்டு பெண்களோடு படுக்கையில் காலம் கழிப்பதும்தான் அவரது வாழ்வு.
பிரிட்டாஷார் மற்றும் இந்திய நிர்வாகத்தின் கீழான தனது பதினைந்து வருட அரச உத்தியோக காலத்தில் தனது மனைவியையும் குழந்தையையும் இழந்து நிற்பவர் அவர்.. அவரது மகளுக்கு இறக்கும்போது பதினைந்து வயதாயிருந்தது. மாஜிஸ்திரேட்டு ஸ்திரீலோலன் போல் தோற்றம் தருவார் ஆயினும் அவர் இரக்க சிந்தை கொண்டவர். மதச்சார்பற்றவர். மனித உயிர்க் கொலையை மறுப்பவர். அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தோற்றம் கொண்டவர்.
இந்தியாவெங்கும் இந்து முஸ்லீம் கலவரத்தினால் மக்கள் ஆயிர்க்கணக்கில் கொலையுண்டு கொண்டிருக்கும்போது மனோ மஜ்ரா கிராமத்தில் சீக்கிய இஸ்லாமிய இந்து மக்களுக்கடையில் இணக்கம் நிலவுவதை பெருமித உணர்வடன் நினைவு கூர்கிறார் மாஜிஸ்திரேட்டு.
மனோ மஜ்ரோவில் ஒருநாளில் வட்டிக்குப் பணம் கொடுப்பவரின் வீடு கொள்ளையடிக்கப்படுவதோடு வட்டிக்காரரும் கொலை செய்யப்படுகிறார். அந்த நேரத்தில் ஜக்கா நூரானோடு வேறோரிடத்தில் கலவியில் ஈடுபட்டிருக்கிறான். கொள்யைடித்த மல்லி கொள்ளயைடித்த தங்க வளையல்களை தனது எதிரியான ஜக்காவின் வீட்டுக்குள் போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறான். அடுத்த நாள் ஜககா கொலைக்குற்றம் சாட்டப்பட்டு உள்ளுர் காவல் நிலையத்தில் சிறை வைக்கபப்படுகிறான். ஜக்கா ஒரு கொலையாளி அல்ல பலியாடு என்பது மாஜிஸ்திரேட்டுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் தெரியும். ஆனால் நீதியை உடனே நிறைவேற்றுவதான நாடகம் நடந்தேறுகிறது.
பஞ்சாப் கிராமங்களில் அரசியல் நிலைமைகளைத் தெரிந்து கட்சித் தலைமைக்குச் சொல்வதற்காக இக்பால் என்னும் ஒன்றுபட்ட இந்தியப் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இச்சூழலில் மனோ மஜ்ரா கிராமத்துக்கு வருகிறார். மசூதிக்குச் சென்று வழிபடுகிறார். அக்கிராமத்தில் மதக்கலவரம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்கிறார்.
முஸ்லீம் மக்க்ள கூலி விவசாயிகள் என்பதையும் முழு நிலமும் சீக்கிய நிலப்பிரபுக்களிடம் இருப்பதையும் தெரிந்து கொள்கிறார். நடப்பது வரக்கப் போராட்டமேயல்லாது மதக்கலவரம் அல்ல என்பதை கட்சித் தலைமைக்கு தந்தி மூமை; அறிவிக்கிறார். தந்தி அலுவலகச் சிப்பந்தி அந்தத் தந்திச் செய்தியை போலீஸ் நிலையத்துக்குத் தெரிவிக்கிறார். தந்தி கொடுத்தவனும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினனும் ஆன இக்பால் கைது செய்யப்படுகிறான். இக்பால் அம்மணமாக்கப்பட்டு அவனது குறி சுன்னத் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பரிசோதிக்ப்படுகிறது.
எர்த் திரைப்படத்திலும் மதம் மாறியதாகச் சொல்ப்பட்ட முன்னாள் இந்துவானவனின் ஆண்குறியை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பரிசோதிக்கிறார்கள். ஹே ராம் படத்தில் அம்ஜத்கானின் ஆண்குறி சுன்ன்த் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை இந்து அடிப்படைவாதிகள் பரிசோதிக்க முயல்கிறாரக்ள். முன்பகுதி வெட்டப்பட்ட ஆண்குறியைப்பார்த்த போலீஸ் அதிகாரி இக்பால் ஒரு முஸ்லீம் என்கிறான். தொத்துவியாதியிலிருந்த காப்பாற்றிக் கொள்ளவே முன்பகுதியை வெட்டிக் கொண்டேன் என்கிறான் இங்கிலாந்தில் கல்வி கற்றவனான இக்பால். இக்பால் பிறப்பில் சீக்கியன். மதச்சின்னங்கள் ஏதும் அனியாதவன். மதச்சார்பற்றவன். வங்கப் புரட்சிக்கவிஞன் இக்பாலின் பெயரைச் சூட்டிக்கொண்டவன்.
இத்தகையதொரு சூழலில் பீகாரிலிருந்து மண்டையோடுகளோடு வரும் சில முஸ்லீம்கள் மாஜிஸ்திரேட்டைச் சந்தித்து மனோ மஜ்ரா கிராமத்தில் கூட்டம் போட அனுமதி கேட்கிறார்கள். அம் மண்டையோடுகள் இந்துக்களால் பீகாரில் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் மண்டையோடுகள் என்கிறார்கள் வந்தவர்கள். மாஜஸ்திரேட்டு அவர்களை கோபத்துடன் கிராமததிலிருந்து விரட்டுகிறார்.
மதப் பதட்டம் மெல்ல மெல்ல கிராமத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிராமத்தின் ஆற்றின் குறுக்கே வெட்டிச் செல்லும் இரயில் வண்டி இப்போதெல்லாம் நேரம் கெட்ட நேரத்தில் மயான அமைதியோடு ஊர்ந்து வரத் தொடங்குகிறது.
கிராமத்தில் நிறுத்தப்பெறும் இரயிலிலிருந்து ஆயிரக்கணக்கான வெட்டிச் சிதைகக்ப்பட்ட உடல்கள் பரந்த மைதானத்தில் சிதையூட்டி எரிக்கப்படுகிறது. கரும்புகை கிராமத்து வானத்தின் மீது படிகிறது. அடிக்கடி இரயில் வந்தபடியே இருக்கிறது. பிணங்களும். அந்த இரயில்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயரும் சீக்கியர்களையும் இந்துக்களையும் ஏற்றிக் கொண்டு வரவேண்டிய ரெயில்கள். இப்போது பிணங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. வரும் வழியிலேயே இந்திய சீக்கிய அகதிகள் பாகிஸ்தானிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டு விடுகிறார்கள்.
முஸ்லீம்மக்களுக்கு எதிரான மதத்துவேஷம் இதன் மூலம் மனோ மஜ்ரா கிராமததில் பரவுகிறது. முஸ்லீம் மக்களை விரட்டவேண்டும் எனும் உணர்வ போலீஸ்காரர்களுக்கும் அங்கு வநது சேரும் இந்திய இராணுவத்தினருக்கும் உருவாகிறது. சம நேரத்தில் இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்குக் கொண்டு போவதற்கு பாகிஸ்தான் இராணுவம் மனோ மஜ்ராவுக்க வருகிறது. பாகிஸ்தானின் லாகூருக்குப் போகும் முன்பாக அருகிலிருக்கம் அகதிகள் முகாமுக்;கு முஸ்லீம் மக்களை ஏற்றிக் கொண்டு போக டிரக் வந்து நிற்கிறது.
நூரான் தனது காதலனும் கொள்ளையனும் ஆன ஜககாவின் தாயிடம் சென்று கண்ணீர் சொரிந்தபடி நிற்கிறாள். ஜக்காவின் குழ்நதையை தான் தன் வயிற்றில் சுமப்பதாகச் சொல்கிறாள். தான் இரண்டு மாதக் கர்ப்பம் என்று அரற்றுகிறாள். பரிவுடன் நூரானை தனது மார்பில் அனைத்துக் கொள்ளும் ஜக்காவின் தாய்தன் மகன் வந்து அவளை விடுவிப்பான் என உறுதியுடன் கூறுகிறாள். நூரான் கண்ணீருடன் அகதி முகாம் நோக்கிச் செல்கிறாள். இன்னொரு கொலையாளி போலீஸிடம் பிடிபடுகிறான். ஜக்கா இருக்கும் ஜெயிலுக்குக அவன் கொண்டு வரப்படுகிறான். சீக்கிய முஸ்லீம் கலவரம் வேகமாக பஞ்சாப் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. வட்டிக்காரனைக் கொனறவர்கள் பீகாரிலிருந்து வந்த முஸ்லீம்கள் என்று சொல்வதன் மூலம் உள்ளுர் முஸ்லீம் மக்களைக்காப்பாற்றுகிறார் மாஜிஸ்திரேட்.
கம்யூனிஸ்டான இக்பால் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சரரந்;தவன் என போலீஸ் குற்றம் சாட்டுகிறது. இந்து முஸ்லீம்; பதட்டம் வேறு வேறு வகைகளில் மனோ மஜ்ராவில் ஊடுறுவிவிட்டது. கிராமத்தில் முஸ்லீம் எதிர்ப்பைத் தணிக்க அவர்களைக் கைது செய்துவிட்டதான தோற்றத்தைத் தருகிறார் மாஜிஸ்திரேட்.
நெருப்பு அணையவில்லi. இந்திய இராணுவத்தினரும் போலீசும் இந்துக் கொள்ளையர்களுடன் இணைந்து கொண்டு முஸ்லீம் வீடுகளைச் சூறையாடுகிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். குழந்தைகளைக் குருரமாகக் கொல்கிறார்கள். முஸ்லீம்கள் ஒரு இந்துப் பெண்ணைப் பலாத்காரப் படுத்தினால் சீக்கியன் இரண்டு முஸ்லீம் பெண்களை பலாத்காரப் படுத்துங்கள் என வெறிக் கூச்சலிடுகிறார்கள். ஒரு பிணம் பாகிஸ்தானிலிருந்து வந்தால் இரண்டு பிணங்களை இங்கிருந்து அனுப்புங்கள் என்கிறார்கள்.
கொள்ளையர்கள் மல்லி தலைமையில் இத் திட்டத்தைச் செயல்படுத்த முனைகிறார்கள். அகதி முகாமலிருந்த முஸ்லீம் அகதிகளை ஏற்றிக் கொண்டுவரும் ரெயில் ஆற்றுப் பாலத்தின் மீது வரும்போது இரயிலில் பாகிஸ்தான் போகும் மக்களைக் கொல்வது அவர்களது திட்டம்.
இரும்புப் பாலத்தின் இரு பக்கமுமான சட்டங்களை இணைத்து பாலத்தின் குறுக்கே கனத்த கயிற்றைக் கட்டுவது அவர்களது திட்டம். ரெயில் பெட்டியின் மீதமர்ந்து வரும் முன்னூறு முதல் நானூறு வரையிலான அகதிகள் குறுக்குக் கயிற்றில் அகப்பட்டுச் சாவார்கள் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.
பிற்பாடு அவர்களது பிணங்களைச் சுமந்தபடி ரெயில் பாகிஸ்தானுக்குப் போகும். திட்ட்தைக் கேள்வியுறும் மாஜிஸ்திரேட் பிரச்சினை கைமீறிப் போய்விட்டதையும் தனது அதிகாரம் அர்த்தமிழந்து போய்விட்டதையும் உணர்கிறார். மனம் தளர்ந்த நிலையில் நிறையக் குடிக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்து ஜக்காவையும் இக்பாலையும் சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிடுகிறார்.
கொள்ளையன் ஜக்கா மதம் கடந்தவன். முஸ்லீம் பெண்ணாண நூரானை நேசிப்பவன். சொந்தக் கிராமத்து மக்களைத் துன்புறுத்தாதவன். இக்பால் மதச்சார்பற்றவன். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன். கொலைகளைத் தடுத்து நிறுத்த இவர்கள் ஏதேனும் செய்வார்கள் என்பது மாஜிஸ்திரேட்டுக்குத் தெரியும். அவர்களை விடுதலை செய்துவிட்டு அன்று இரவு முழுக்கக் குடித்தபடியிருக்கிறார் மாஜிஸ்திரேட்.
இரவு துவங்கிவிட்டது. அகதி முகாமிலிருந்து பாகிஸ்தானுக்குப் போகும் ரெயில் புறப்படத்தயாராகிவிட்டது. நூரான் ஜக்காவுக்காக திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தபடி ஈரமான கண்களுடன் ரெயில் பெட்டியில் ஏறுகிறாள். ரெயில் பெட்டியின் மீது கட்டுக்கடங்காத கூட்டம் ஏறுகிறது. பாலத்தில் கொள்ளையர்களால் கயிறு கட்டப்பட்டுவிட்டது. கொலை விழும் கோரத்தைக் காண்பதற்காக பாலத்தின்; பக்கங்களில் அமர்ந்திருக்கிறார்கள் சீக்கியக் கொள்ளையர்களும் இந்திய இராணுவத்தினரும் போலீசும். மதத்தினால் உலுப்பப்பட்ட அதிகார வர்க்கம் சார்ந்தவர்கள் அவர்கள்.
ஜக்கா ஓடி வருகிறான். பாலத்தில் தொங்கியபடி கயிற்றை அறுக்கத் தொடங்குகிறான். இரயில் முன்னேறி முன்னேறி வருகிறது. பாலத்தின் முகப்பில் கயிற்றை அறுத்துக் கொண்டிருக்கும் உருவத்தைப் பார்க்கும் போலீசும் கொள்ளையர்களும் இந்திய இராணுவத்தினரும் அவனைச் சுட்டுக் கொல்கிறார்கள்.
ஜக்கா பிணமாகி வீழ்கிறான். கயிற்றை அறுத்துமுடித்தபின்பே பிணமாகிறான் ஜக்கா. இரயில் அமைதியாக பாலத்தைக் கடந்து இருளில் பெட்டிகளின் நீண்ட வரிசைகள் தெரிய பாகிஸ்தான் நோக்கியபடி பத்திரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. காதலனின் பிரிவாற்றாமையால் துயருரும் பஞ்சாபி நாடோடிப்பாடல் ஒன்று திரையை நிறைத்தபடி கசிகிறது.
உலக வரலாற்றின் மகத்தான சோகம் அந்நாட்களில்தான் நிகழ்ந்தது. மாபெரும் மக்கள் இடப்பெயர்வு அந்நாட்களில்தான் நிகழ்ந்தது. பிரிவும் கொலைகளும் கற்றுத்தரும் பாடம் பற்றிய சிந்தனைகளை படம் நமக்குள் ஏற்றி வைக்கிறது. படத்தின் சில காட்சிகள் மத இன மொழி குரோதங்கள் கொலைவெறியாகப்பரிமாணம் பெறும் எந்தப் பூகோளப்பரப்புக்கும் பொருந்தி வருபவை. முஸ்லீம் எதிர்ப்பை உசிப்பிவிடும் காட்சியொன்று இவ்வாறு போகிறது : அன்று குரு கோபிந்த் சிங்கை தூக்கத்தில் கொன்ற முஸ்லீம்களைக் கொல்வது நமது மதக்கடமை என்கிறார்கள் சீக்;கியர்;கள். நிகழ்காலக்கொலைகளை நியாயப்படு;த்த பழைய பிணஙகளைத் தோண்டியெடுத்து வீராவேசம் ஊட்டுவதுதான் இன்று வரலாற்று ஆய்வாக உருவாகிவிட்டது. பி.ஜே.பி.அரசாங்கத்தின் அகழ்வாய்வுகள் அப்படிப்பட்டவைதான்.
இன்று அரசுகளும் மதங்களும் குறுங்குழுவாத இயக்கங்களும் எங்கெங்கும் இதைத்தான் செய்துவருகின்றன. படத்தின் அரசியலேர்டு ஊடாடியபடி ஒரு மானுட நாடகமும் கதையில் வருகிறது. அசீனா என்றொரு பதினாறு வயது முஸ்லீம் சிறுமி தாய் தகப்பனை இழந்த அனாதை. கஜல் பாடல்களைப் பாடியபடி நடனமாடி பெரிய மனிதர்களைப் பரவசமூட்டுபவள் அவள். தனது பாட்டியினால் காமம் பயிற்றுவிக்கப்பட்டு காசுக்கு விற்கப்படுபவள். ஆயினும் அவள் குழந்தை. மாஜிஸ்திரேட்டுக்கும் அப் பெண்ணுக்குமான உறவு பூடகமானது. இறந்துவிட்ட தனது மகளை இச்சிறுமியின் பரிசுத்தத்தில் அப்பாவித்தனத்தில்; தரிசிக்கிறார் மாஜிஸ்திரேட். சிறுமி அப்பாவித்தனமாக தன்னை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுமாறு மாஜிஸ்திரேட்டிடம் கேட்கிறாள். ஆண்களோடு என்ன செய்வதென்று தனக்குத் தெரியாது ஆனால் ஆண்கள் சொல்வதைச் செய்யும்படி பாட்டி சொல்லியிருக்கிறாள் எனும் சிறுமி உங்களுக்குப் பெண்களோடு என்ன செய்வதென்று தெரியும் என்கிறாள். தனது இடுப்பு எலும்புகள் குழந்தை பெற ஏதுவாகிவிட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள் என்கிறாள் அவள்.
இஸ்லாமியச் சிறுமியான அவள் சாப்பாடு வாங்கக் கூட வெளியெ போக முடியாத கலவரச் சூழலில் மாஜிஸ்திரேட்டிடம் விடப்படுகிறாள். அவர் அப்பெண்ணுக்கு சாப்பாடு வாங்கித் தருகிறார். தனது மகளைப் போல அவளைக் கட்டிக்கொண்டு அவளது சின்ன மார்பின் மீது தலை சாய்த்துத் தூங்கிப்போகிறார். இந்தச் சிறுமியாக நடிப்பவர் திவ்யா தத்தா. அன்பாக அவரது தலையைத் தடவுகிறாள் சிறுமி.
இறுதியில் பாகிஸ்தான் நோக்கிப்போகும் அகதிகள் கூட்டத்தோடு அவளையும் அவர் அனுப்பிவிடுகிறார். ஓரு வயதான மாஜிஸ்திரேட்டுக்கு வைப்பாட்டியாக இருப்பதை விடவும் பாகிஸ்தான் அகதியொருவனுக்கு அவள் மனைவியாக இருப்பது மேல் என்கிறார் அவர். அல்லது இருளின் கடைசியில் தெரியும் எவனோ ஒருவனுக்கு இரவுத் துணையாக இருப்பது மேல் என்கிறார்.
மதம் அரசாங்கத்தோடு; இணைந்துவிட்ட உலகச்சூழலில் இந்துநாடு இஸ்லாம்நாடு கிறிஸ்தவநாடு தேசியமும் மதமும் ஒன்று என்று அடையாளம் அரசியல் அடையாளமாகவும் கலாச்சார அடையாளமாகவும் ஆகிவிட்ட சூழலில் இனத்தேசியம் மத அடையாளத்தை வரித்துக்கொள்ளும் இன்றைய சூழலில் ஒரு கலைஞன் என்னவிதமான சரியான அரசியலை ( பொலிடிகலி கரக்ட் பொலிடிக்ஸ்) பேசிவிடமுடியும்? மனிதக் கொலைகளை பேரழிவுகளை வரலாற்று ரீதியில்; நியாயப்படுத்திவிட முடியுமானால் கலைஞன் இங்கு எந்த மதிப்;பீடுகளுக்காக வாதிடுபவனாக இருத்தல் முடியும்?
சார்பான அரசியல் பேசுபவர்கள் சார்புநிலை எடுப்பவர்கள் இன்று எதையும் நியாயப்படுத்திவிட முடியும். அநேகமாக மனித விழுமியங்கள் குறித்த அக்கறை இன்று விடுதலைக் கோட்பாட்டாளர்களிடம் அருகி வருகிறது. இச்சூழலில் இலக்கியமும் கலைப் படைப்புகளும் மட்டுமே தத்துவ அரசியல் கோட்பாட்டு மத இன ஜாதிய அதிகாரங்களுக்கு எதிரான–மனித விழுமியங்களுக்கு ஆதரவான நிலைபாடுகளை முன்வைத்து வருகிறது. இவர்களின் கோரிக்கைகளை கேள்விகளை வன்முறையின் பங்காளிகள் என இருவருமே வரலாற்றின் பெயரில் நடைமுறையின் பெயரில் நிராகரித்துவிடலாம். ஆயினும் நாகரீக சமூகத்தைத்;தான் இவ்விருவரும் உருவாக்கப் போகிறார்கள் என்பது மிகுந்த சந்தேகத்துக்குரியது என்பது மட்டும் உண்மை. கொலைகளின் மீது மனித நாகரீகம் கட்டப்படமுடியாது.