ஜப்பானின் புகுஷிமா அணுசக்தி நிலையத்தில் உள்ள 3வது அணு உலையும் இன்று காலை வெடித்து சிதறியது. அணு உலையில் அதிக நைட்ரஜன் வெளியேறி வருவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. 3வது பிரிவில் குளிரூட்டி செயல்படாததால் அணு உலை வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு உலை வெடித்துள்ளதால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே ஹிரோஷினாவை போன்று மீண்டும் பெரும் அழிவு ஏற்படுமா என்ற அச்சத்தில் ஜப்பான் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் 19 பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.