Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மூதூரில் விதவைகள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல்.

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, ஐக்கிய நாடுகள் விதவைகள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல் ஒன்றை மூதூர் பெரியவெளி பொது மண்டபத்தில் நடத்தியது. இந்த ஒன்று கூடலில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாதர் சங்க உறுப்பினர்கள், கணவனை இழந்தவர்கள், காணமல் போனவர்களின் மனைவிமார், தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் மனைவிமார் என 90 பேர் வரையில் கலந்து கொண்டதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஒன்று கூடலில் கலந்து கொண்ட பெண்கள்,

பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வல்லுறவு போன்றவற்றை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முயற்சிக்க வேண்டும்.

யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் விதவைகளாக்கப்பட்ட இளம் பெண்களின் மறுமணத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும்.

இவற்றை அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள், கிராம மட்டப் பெண்கள் அமைப்புக்கள் கவனத்தில் எடுத்து செயற்டுத்த வேணடும் என்ற கருத்தக்களை முன்வைத்தார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version