மகிந்த ராஜபக்ச அரசு ஏகாதிபத்தியங்களின் அங்கீகரத்தோடு தொடரும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்களின் ஒரு பகுதியாக திட்டமிட்ட பெளத்த சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.
மூதூரில் கிட்டத்தட்ட 800 தமிழ், முஸ்லிம் குடும்பங்களின் அதிகூடிய சாகுபடி கொண்ட வயல் நிலங்களை சிங்களக் குடியேற்ற வாசிகள் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பிற்கு காரணமான சிங்கள குடும்பங்களுக்கு தலைமை தாங்குபவர் டெகிவத்த நீலபூல சாது எனும் சிங்கள பேரினவாத துறவி.
மேற்கு நாடுகள் பேரினவாத அரசோடு பேரம் பேசும் நோக்கோடு போர்க்குற்றச்சாட்டுகளைத் தற்காலிகமாக முன்வைக்கின்றன. இலங்கையை இந்திய சீன அரசுகளோடு இணைந்து சூறையாட தமது பங்கை உறுதி செய்துகொள்ள மட்டுமே அவ்வப்போது மனித உரிமை குறித்துப் பேசுகின்றனர். இதன் மறு புறத்தில் ராஜபக்ச அரசு தனது இனச் சுத்திகரிப்பை நேர்த்தியாக நிறைவேற்றிக் கொள்கிறது.