Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் ‘வெற்றிகரமாக’ பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர்

இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு ஐ.நா. மன்றத்தில் உள்ளவர்களிடமும், மனித உரிமை கழகத்தினரிடமும் மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் மனு கொடுத்து விட்டு வெற்றிகரமாக பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர். என தி,மு,க தலைவரும் முன்னை நாள் முதல்வரும் இனப்படுகொலை நடைபெற்றபோது உண்ணாவிரதம் இருந்தவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. மன்றத்திலும், லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை நடத்திய கூட்டத்திலும் , ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும் வழங்கி விட்டு சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோருக்கு டெசோ அமைப்பின் சார்பில் ‘பாராட்டு’ கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.அந்தக் கூட்டத்திலேயே வெற்றி குறித்துக் குறிப்பிட்டார்.

Exit mobile version