மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார வசதியின்றி மக்கள் தவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இடிந்தகரையில் உள்ள லூர்து மாதா ஆலயத்தில் 10 கிராம மக்களுடன் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் ஆபரேஷன் நடத்த போலீஸ் திட்டமிட்டிருப்பதாகவும் உதயகுமார் பகீர் தகவலை தெரிவித்தார்.